Home
News

BSNL ஒரே போடு.. இனி 28 இல்ல.. 30 இல்ல.. 50 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், 50 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. வெறும் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள் (Unlimited Voice Calls), நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 50 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற 3 சலுகைகள் மட்டுமே கொடுக்கப்படும். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போல ஓடிடி, கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்காது.

BSNL ஒரே போடு.. இனி 28 இல்ல.. 30 இல்ல.. 50 நாட்கள் வேலிடிட்டி!

ஆகவே, 50 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகின்றன. 2 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். 50 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 100 ஜிபி டேட்டா கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். 2 ஜிபிக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களில் கிடைப்பதை போல 64 கேபிபிஎஸ் வேகம் கிடைக்காது. 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும். ரூ.350 விலைக்கும் கம்மியாக 50 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால் ப்ரீபெய்ட் கஸ்டமர்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமும் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. 72 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. 2 மாதங்களுக்கு மேல் மற்றும் 3 மாதங்களுக்கு கீழ் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 72 நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுத்து இருக்கிறது. இந்த டேட்டாவுக்கு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் அனுப்பி கொள்ளலாம். ஒருவேளை இதேபோல மலிவான விலைக்கு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் வேண்டுமானால், ரூ.897 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 165 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும். 5 மாதங்களுக்கு மேல் சலுகைகள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.897 திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Plan Details): இந்த திட்டத்துக்கும் 165 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 Plan With 50 Days Validity Unlimited Voice Calls 2GB Data Per Day Check Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X