Home
News

BSNL-க்கு ஒரே ரீசார்ஜ்.. இனி 50 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினசரி 2 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 50 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், அவர்களுக்கு பக்காவான ஆப்ஷன் இருக்கிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் இதில் மலிவான விலை மட்டுமல்லாமல், அதிகப்படியான டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

28 நாட்கள், 30 நாட்கள் அல்லது காலண்டர் மாத வேலிடிட்டி கிடைத்தாலும், தேவைக்கு ஏற்ப வேலிடிட்டி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று டெலிகாம் கஸ்டமர்கள் நினைக்கின்றனர். இதனாலேயே 50 நாட்கள், 70 நாட்கள், 75 நாட்கள் போன்ற வேலிடிட்டி கொண்ட திட்டங்களும் கிடைக்கின்றன. இதில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவைவிட பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக ஆப்ஷன்களை வைத்துள்ளது.

BSNL-க்கு ஒரே ரீசார்ஜ்.. இனி 50 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

இதில் 50 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம், மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கும் அதே நேரத்தில் அதிக டேட்டா சலுகையுடனும் கிடைக்கிறது. போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைப்பதால், டேட்டாவில் குறை இருக்காது. ஏனென்றால், இந்த திட்டம் 4ஜி சேவையை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கும் அதிக டேட்டா சேவையை கொடுத்துள்ளது. முழு சலுகைகள் எப்படி கிடைக்குது?

பிஎஸ்என்எல் ரூ 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முன்பே சொன்னதை போல 50 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல 2 ஜிபி டேட்டா தினசரிக்கு கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக 100 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடிகிறது. மேலும், 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு அடுத்து நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதைவிட அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம் ஒன்று இருக்கிறது.

அந்த திட்டத்தில் இதைவிட அதிக வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரி டேட்டா கிடைக்காது. மொத்தமாக லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படும். வாய்ஸ் கால்கள் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் அதிக வேலிடிட்டியுடன் சிம் ஆக்டிவ் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 65 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தில் கிடைத்ததைவிட 15 நாட்கள் அதிகமாக இருக்கிறது. அதேபோல விலையும் ரூ.28 விலை கம்மியாகவும் கிடைக்கிறது. ஆகவே, டேட்டாவில் பெரிதாக சலுகை இருக்காது. ஆகவே, மொத்தமாகவே 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

இந்த 10 டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் சலுகையில் கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 Plan With 50 Days Validity 2GB Daily Data Unlimited Voice Calls Check Affordable Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X