Home
News

ஜியோ, பிஎஸ்என்எல்.. ரூ.349 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. எந்த நிறுவனம் அதிக சலுகை வழங்குகிறது?

ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ ரூ.349 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் என்னென்ன நன்மைகள் வழங்குகின்றன? எவ்வளவு நாட்கள் வேலிடிட்டி தருகின்றன? மற்றும் எது சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ, பிஎஸ்என்எல்.. ரூ.349 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். M/s On Mobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ, பிஎஸ்என்எல்.. ரூ.349 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

எது சிறந்தது? ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே பிஎஸ்எனஎல் நிறுவனத்தில் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது.

அதாவது நாட்டில் 4ஜி சேவைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். 2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎன்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 plan offers more benefits than Jio Rs 349 plan: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X