ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல்.. ரூ.349 மற்றும் ரூ.347 திட்டங்கள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. எது சிறந்தது?
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களை விட கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவில்லை.
அதாவது தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். எனவே நாடு ழுமுவதும் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் அதை விட 2 ரூபாய் குறைவாக உள்ள ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டங்களில் எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 349 Prepaid plan) ஆனது தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் கம்மியான டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்கி அசத்தி உள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications