அந்த மனசு தான் BSNL.. அடுத்த 50 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. ஜன.31 க்குள்ள இதை பண்ணுங்க!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு எந்தவித விலை உயர்வும் இல்லாமல், டேட்டா சலுகைகள் கூடுதலாக்கப்பட்டு உள்ளன. அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுத்த திட்டம் இப்போது 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆனால், ஜனவரி 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தின் முழு சலுகைகளும் மலிவாக கிடைக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ.347 திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைத்தது. இப்போது, 2.5 ஜிபி டேட்டாவாக கூடுதலாக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இனிமேல் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டா சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ. 347 திட்ட விவரங்கள் (BSNL Rs 347 Plan Details): 50 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். ஆகவே, 50 நாட்களுக்கு 125 ஜிபி டேட்டாவை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுத்துள்ளது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகளுடன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜனவரி 31 ஆம் தேதி வரையில் இந்த 2.5 ஜிபி டேட்டா சலுகையை பெறலாம். பிறகு பழையபடி நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை மட்டும் எதிர்பார்க்கலாம்.
இதேபோல ஜனவரி 31 ஆம் தேதி மற்றொரு திட்டத்துக்கும் கடைசி நாளாக இருக்கிறது. இது புதிய பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதாவது, புதிய சிம் கார்டுடன் ரூ.1 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகளை கொடுத்து உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ. 1 திட்ட விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகள் இலவமாக கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சிம் கார்டை வாங்கியவுடன் ரூ.1 விலை கொண்ட திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
30 நாட்கள் வேலிடிட்டியை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. 30 நாட்களுக்கு மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். பிஎஸ்என்எல் ஆப் மற்றும் பிஎஸ்என்எல் வெப்சைட் லழியாக இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். கூடுதல் டேட்டா சலுகைகள் ரூ.347 திட்டத்துக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.
மொத்தமாக 4 திட்டங்களின் டேட்டா கூடுதலாக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பிஎஸ்என்எல் ரூ.225 திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ரூ.347 திட்டம் மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல ரூ.485 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டம் ஆகியவற்றிலும் 2 ஜிபியாக இருந்த டேட்டா 2.5 ஜிபியாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








