Home
News

BSNL குட் நியூஸ்.. ரூ.350 கூட விலை இல்லை.. 450+ சேனல் FREE.. வாய்ஸ், டேட்டா, SMS-லாம் இருக்கு.. எந்த பிளான்?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் இந்தியாவில் இப்போது யாரும் நம்பவே முடியாத ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் யாரும் வழங்க முடியாத மலிவு விலையில் 54 நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் 450+ லைவ் டிவி சேனல்களை வழங்கி அசத்தியுள்ளது. இந்த அணைத்து நன்மைகளுக்கும் சேர்த்து, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ரூ. 350 கூட வசூலிக்கவில்லை என்பதே வியப்பாக இருக்கிறது. இது எந் திட்டம்? இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று முழுமையாக பார்க்கலாம்.

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் கூட வழங்க முடியாத நன்மைகளை இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் 350 ரூபாய் விலைக்குள் 54 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (54 days validity plan) கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்ததில்லை.

BSNL குட் நியூஸ்.. ரூ.350 கூட விலை இல்லை.. 450+ சேனல் FREE..

BSNL குட் நியூஸ்.. ரூ.350 கூட விலை இல்லை.. 450+ சேனல் FREE:

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 350 ரூபாய் விலையில் 54 நாள் வேலிடிட்டி நன்மையை வழங்குவதோடு மட்டுமில்லாமல், இலவசமாக 450-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை (BiTV 450+ Live TV Channels) உங்களுக்கு பிடித்தமான நேரத்தில் பார்த்து மகிழ்ந்திட அனுமதிக்கும் BiTV சேவையையும் இப்போது பைசா கட்டணம் இல்லாமல் இந்த திட்டத்துடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வாய்ஸ் (Voice), டேட்டா (Data) மற்றும் SMS நன்மைகளையும் இந்த திட்டம் வழங்குகிறது.

350 ரூபாய்க்குள் இத்தனை நன்மைகள் கிடைத்தால் யார் தான் வேண்டாமென்பார்கள்? பிஎஸ்என்எல் நிறுவனம் 350 ரூபாய் விலைக்குள் (BSNL prepaid plan under Rs 350) புதிதாக அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 347 திட்டம் (BSNL Rs 347 Plan) ஆகும். இந்த திட்டம் 54 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த காலத்தில் BSNL உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 347 திட்டம் (BSNL Rs 347 Plan):

இந்த திட்டம் தினசரி 2GB ஹை - ஸ்பீட் டேட்டா நன்மையை (data high-speed) வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, உங்கள் திட்டத்தின் இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம், இந்த திட்டத்தின் பயனர்களுக்கு BiTV சேவையை இலவசமா வழங்குகிறது.

பிஎஸ்என்எல் சமீபத்தில் அறிமுகம் செய்த டைரக்ட்-டூ-மொபைல் அடிப்படையிலான சேவை தான் இந்த புதிய BiTV சேவையாகும். இது இன்டர்நெட் தேவையே இல்லாமல் உங்களுக்கு 450-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை உங்கள் போனில் காண அனுமதிக்கிறது. இனி உங்கள் பொழுதுபோக்கிற்காக நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி தனி OTT சந்தாவை வாங்க வேண்டியதில்லை. இத்திட்டம் இந்தியாவின் சில OTT நன்மைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 350 ரூபாய் விலைக்குள் 54 நாட்களுக்கு செல்லுபடியுடன் இலவசமாக 450+ லைவ் டிவி சேனல்களை வழங்கும் ஒரே ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிடம் இருந்து மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் ஒரு ஆகசிறந்த திட்டத்தை தேடுபவர்களுக்கு இந்த பிளான் ஒரு வரப்பிரசாதம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 Plan 54 Days Validity With FREE BiTV 450 Plus Live TV Channels Unlimited Voice Daily 2GB Data 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X