Home
News

பாக்கெட்ல ஓட்டை போடமா 50-72 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் BSNL திட்டங்கள்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா..

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குகிறது. இப்போது அந்த இரண்டு திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி தரும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 72 நாட்கள் வேலிடிட்டி.. டேட்டா

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும். ஆகவே நீங்கள் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி, டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 மறறும் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை தினமும் 3ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அள்ளி தரும் BSNL.. கம்மி பட்ஜெட்ல 72 நாட்கள் வேலிடிட்டி.. டேட்டா

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 347 and Rs 485 Prepaid Plans: Check Validity and Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X