Home
News

தம்பி Jio ஓரம்போ.. சிக்கனமான பேக்கை BSNL அண்ணன் நான் தரேன்.. சூடு பறக்கும் புதிய BSNL ரீசார்ஜ் திட்டம்..

யாருப்பா சொன்னது? மலிவு விலையில் சிக்கனமான திட்டங்களை போதுமான அளவு டேட்டாவுடன் வழங்க முடியாது என்று, இந்த காலகட்டத்திலும் சிக்கனமான விலையில், சராசரி மக்களுக்கு தேவையான டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி எஸ்எம்எஸ் நன்மை என்று எல்லாவற்றையும் ஒரே பிளானில் எங்களால் வழங்க முடியுமென்று பிஎஸ்என்எல் (BSNL) சத்தமாக நிரூபித்துள்ளது. இதனால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் இப்போது திகைப்பில் என்ன செய்வதென்று புரியாமல் நிற்கிறது. குறிப்பாக அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் BSNL அறிமுகம் செய்துள்ள சிக்கனமான திட்டத்தால் கவலை அடைந்துள்ளது.

இந்திய மக்களிடம் என்னதான் அதிக பணமிருந்தாலும், இல்லாவிட்டாலும், பொதுமக்கள் எப்போதும் சிக்கமானாக இருப்பதையே விரும்புகிறார்கள். சமீபத்தில் டெலிகாம் நிறுவனங்கள் நடத்திய திடீர் விலை ஏற்றம் காரணமாக மக்கள் இப்போது மலிவு விலை திட்டங்களை அதிக நன்மையோடு வழங்கும், இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) மீது நம்பிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.

தம்பி Jio ஓரம்போ.. சிக்கனமான பேக்கை BSNL அண்ணன் நான் தரேன்..

தம்பி Jio ஓரம்போ.. விலை சிக்கனமான பேக்.. போதுமான தினசரி பலன்.. BSNL அண்ணன் நான் தரேன்:

நம்பிக்கை வைக்கும் மக்களின் எதிர்பார்ப்பை பிஎஸ்என்எல் கட்டாயம் நிறைவேற்றும் என்பதை நிரூபிக்கும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்க முடியாத விலையில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை, அதிக செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்துடன், மிதமான டேட்டா ஒதுக்கீடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் SMS நன்மையோடு வழங்கி அசத்தியுள்ளது. இந்த திட்டத்தை நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 345 திட்டம் (BSNL Rs 345 Plan) என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 345 திட்டம் (BSNL Rs 345 Plan):

பிஎஸ்என்எல்லின் ரூ. 345 திட்டம், சந்தாதாரர்களுக்கு 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை இரண்டு மாதங்களுக்கு வழங்குகிறது. ஆம், இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. தினசரி டேட்டாவை முடித்த பிறகு, நியாயமான பயன்பாட்டு கொள்கையின்படி இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைகிறது.

இந்த திட்டம் உங்களுக்கு தினசரி வெறும் ரூ. 5.75 என்ற விலையில் உங்களின் தினசரி தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. இத்துடன் ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நன்மைகளுடன் இத்தகைய நடுத்தர கால செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் ஒரு திட்டத்தை வைத்து பிஎஸ்என்எல் தனித்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G Tamil Nadu):

இந்த ஒரு திட்டத்தின் மூலம், இந்திய தொலைத்தொடர்பு துறையில் புதிதாக முளைத்த தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எல்லாம் பிஎஸ்என்எல் ஒரு முன்மாதிரி அண்ணனை போல் காட்சியளிக்கிறது. 4ஜி சேவைகள் இல்லாததால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியிலும், தொலைத்தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல் ஒரு சிறந்த சேவை வழங்குனராக இப்போது இந்தியாவில் திகழ்கிறது. பி.எஸ்.என்.எல் இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் தமிழ்நாடு முழு BSNL 4G சேவையை பெறுமென்று BSNL நம்பிக்கையளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 345 Prepaid Recharge Plan With 60 Days Validity 1GB Data Per Day Daily 100 SMS Unlimited Calls BSNL 4G TN
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X