Home
News

BSNL கொண்டுவந்த ரூ.345 ப்ரீபெய்ட் திட்டம்.. 60 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

பிஎஸ்என்எல் (BSNl) நிறுவனம் நாட்டில் சில இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிட்டால் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதும் கூட மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. சரி இப்போது பிஎஸ்என்எல் கொண்டுவந்த ரூ345 ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL RS 345 plan) நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

BSNL கொண்டுவந்த ரூ.345 ப்ரீபெய்ட் திட்டம்.. 60 நாட்கள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 345 Prepaid plan) ஆனது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளன.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி தீர்ந்துவிட்டால் 40கேபிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.345 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை அதிக டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL கொண்டுவந்த ரூ.345 ப்ரீபெய்ட் திட்டம்.. 60 நாட்கள் வேலிடிட்டி..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் நன்மை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிப்ரவரி 10 2025 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.201, ரூ.797 மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கப்பட்டது. குறிப்பாக ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. தற்போது இந்த மூன்று முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கப்பட்டதால் பிஎஸ்என்எல் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 345 Prepaid plan: How many days validity and what are the benefits?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X