ரூ. 345 விலையில் மொத்த இந்தியாவையும் கவர்ந்த BSNL.. Jio, Airtel, Vi பயனர்கள் கூட இப்போ BSNL-க்கு மாற முடிவு..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்திய மக்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்தில், மிகமிக மலிவு விலையில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் வழங்காத விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை வெறும் ரூ. 345 விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) அல்லது வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்காத வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தை BSNL அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை சராசரியாக 15 சதவிகிதம் உயர்த்திய பிறகு, இந்திய தொலைத்தொடர்பு துறையில், BSNL முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

ரூ. 345 விலையில் மொத்த இந்தியாவையும் கவர்ந்த BSNL:
அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது புதிய பிஎஸ்என்எல் ரூ. 345 திட்டம் (BSNL Rs 345 Plan) என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மலிவு விலையில் 2 மாத வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இந்திய டெலிகாம் துறையில் இதுவரை எந்தவொரு நிறுவனமும் ரூ. 350 ரூபாய் விலை பிரிவில் 60 நாட்களுக்கு முழுமையாக செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BSNL பயனர்கள் இப்போது இந்த திட்டத்துடன் இரண்டு மாத செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்துடன், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மை போன்ற பலன்களை இப்போது அனுபவிக்க முடிகிறது. மலிவு விலை காரணமாக இப்போது இந்த திட்டம் அதிக மக்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற பயனர்களும் இப்போது இந்த திட்டத்தை பார்த்து BSNL மாற துவங்கியுள்ளனர்.
BSNL இன் ரூ. 345 திட்டம் (BSNL Rs 345 Plan):
BSNL இன் ரூ. 345 திட்டம் (BSNL Rs 345 Plan) என்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம. இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 1GB வரம்பிற்கு பிறகு இணைய வேகம் 40Kbps-க்கு குறையும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை பயனர்கள் 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் வரை தடையில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறைந்த செலவில் 2 மாதங்கள் வரை செல்லுபடியாகும் வேலிடிட்டியை இத்திட்டம் வழங்கப்படுவதனால், மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவுமே நேரடியாக 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகம் செய்யவில்லை என்பதனால், தனியார் டெலிகாம் நிறுவனத்தின் பயனர்களும் கூட இப்போது BSNL திட்டங்களை பார்த்து பொறாமை கொள்ளும் வகையில் BSNL மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இப்போது பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிறிய குக்கிராமங்களில் கூட இப்போது பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவை பயன்படுத்த கிடைக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு மமுன்பு தமிழகத்தை ஒரு முழுமையாக பிஎஸ்என்எல் 4ஜி வட்டமாக மாற்றவுள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இதற்கான வேலைகளை BSNL நிறுவனம் படு ஜோரான வேகத்தில் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கரணத்தினாலும் மக்கள் BSNL பக்கம் மரத்துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








