அதிரடிக்காட்டும் BSNL: ரூ.321 விலையில் 365 நாள் வேலிடிட்டி.. 15ஜிபி டேட்டா.. ஆனா ஒரு டிவிஸ்ட்.!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காகப் பல சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ.18 முதல் துவங்கி ரூ.6000 வரை, பிஎஸ்என்எல் நிறுவனம் பல திட்டங்களை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பயனர்களின் கண்களில் அடிக்கடி சிக்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.321 திட்டம் திகழ்கிறது. இந்த திட்டத்தை மக்கள் அடிக்கடி கவனிக்க முக்கிய காரணமே, இது வெறும் ரூ.321 விலையில் முழுமையாக 1 வருட வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இது தவிர, இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 15 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர இன்னும் பல நன்மைகளை இந்த திட்டம் வழங்கினாலும், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் போது, பிஎஸ்என்எல் பயனர்கள் சில குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் என்ன? இது யாருக்கெல்லாம் செல்லுபடியாகும்? என்பது போன்ற விஷயங்களை பார்க்கலாம்.
அரசு நடத்தும் BSNL தொலைத்தொடர்பு நிறுவனம், மக்களுக்காகப் பல திட்டங்களை வழங்கி வந்தாலும், இந்த ஒரு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.321 விலையில் 365 நாள் வேலிடிட்டியை எல்லோருக்கும் வழங்கப்போவதில்லை. காரணம் இந்த ரூ.321 ரீசார்ஜ் திட்டம் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இந்த அட்டகாசமான திட்டம் தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முழு நன்மைகளையும் அனுபவிக்க நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்க வேண்டும் என்று BSNL கூறியுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, பிஎஸ்என்எல் ரூ 321 திட்டம் தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இந்த திட்டம் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே தொடர்பு நடக்கும் போது பயனர்களுக்கு இலவச அழைப்பு நன்மையை வழங்குகிறது. மற்ற நேரத்தில் நிமிடத்திற்கு 7 பைசா வசூலிக்கப்படுகிறது. இது உள்ளூர் BSNL நெட்வொர்க்கில் இருக்கும் போது 7 பைசா வசூலிக்கப்படும். அதேபோல், STD அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 15 பைசா வசூலிக்கப்படும்.
இத்துடன் பிஎஸ்என்எல் மாதத்திற்கு 250 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மாதத்திற்கு 15 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும். இது வருடாந்திர செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாக இது இருக்கிறது. ஆனால், இது அணைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. தமிழ்நாடு மாநில காவல்துறைக்கு உதவும் வகையில் BSNL மேற்கொண்டுள்ள ஒரு சிறந்த முயற்சி இது என்று கூறப்பட்டுள்ளது.
இப்படியொரு செயலை இதற்கு முன் எந்தவொரு தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் கூடச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தமிழ்நாடு வட்டத்தின் கீழ் உள்ள BSNL இணையதளத்தில் மட்டும் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரி என்றால், கம்மி விலையில் ஒரு வருட வேலிடிட்டி கிடைக்கும் இந்த திட்டத்தை மிஸ் செய்யலாம் ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








