BSNL சிம் பயன்படுத்துறீங்களா? ஒரே ரீசார்ஜ் 60 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. விட்றாதீங்க..
பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் சமீபத்தில் தான் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. இதன் 4ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்நிறுவனம் 5ஜி சேவையை கூட நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 60 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 319 Prepaid plan) தான் 60 நாட்கள் வேலிடிட்டி தருகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 10ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் திட்டத்தில் 10ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தம் 300எஸ்எம்எஸ் வழங்கப்படும். ஒருவேளை அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.347 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








