BSNL-னா சும்மாவா.. கம்மி காசுல 65 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்..10 ஜிபி டேட்டா.. 300 எஸ்எம்எஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு கம்மி செலவில் 65 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் சலுகையில் எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டாவை ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கொடுக்கிறது. 2 மாதங்களுக்கும் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த மலிவு விலை திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதுவொரு வாய்ஸ் வவுச்சர் திட்டமாக இருந்தாலும், போதுமான அளவுக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களிலும் வாய்ஸ் கால்கள் திட்டம் கிடைக்கிறது. இருப்பினும், அவற்றில் 2 ஆப்ஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல்லில் 10-க்கும் மேற்பட்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் இருக்கின்றன.

அதிலும், மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் 2 மாதங்களுக்கும் மேல் வேலிடிட்டி கொடுக்கும் திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.319 திட்டம் இருக்கிறது. இதில் 65 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் 5 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று மூன்று சலுகைகளும் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 319 திட்ட சலுகைகள் (BSNL Rs 319 Plan Offer): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 65 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் லம்ப்-சம் சலுகையில் 10 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த 10 ஜிபி டேட்டாவை 65 நாட்கள் வேலிடிட்டி முடிவதற்குள் முடித்துவிட்டால், அதன்பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா சலுகை குறைக்கப்படும்.
சொல்லப்போனால், இதுவொரு வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருந்தும், இந்த 10 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. அதேபோல 300 எஸ்எம்எஸ்களையும் இந்த வாய்ல் ஒன்லி திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இதையும் வேலிடிட்டிக்கு முன்பாக பயன்படுத்தி முடித்துவிட்டால், அதன் பிறகு கட்டணம் இருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இப்போது, முக்கியமான சலுகைக்கு வருவோம். இந்த பிஎஸ்என்எல் வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கிடைக்கின்றன. மேற்கண்ட சலுகைகளை 65 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல மலிவான விலைக்கு தினசரி டேட்டாவுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை வாரி வழங்கப்படும். அதாவது, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இதில் பயன்படுத்தி கொள்ள முடியும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழக்கமாக கிடைக்கும் திட்டத்தை போலவே இருக்கும். இதன் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட சலுகைகள் (BSNL Rs 299 Plan Offer): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடையே அதிகம் ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாகவும் இருக்கிறது. இந்த 30 நாட்களில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும்.
முந்தைய திட்டத்தை போலல்லாமல், இதில் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. அதே நேரத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் இந்த திட்டம் கொடுக்கிறது. இதேபோல பல்வேறு திட்டங்களை மலிவான விலைக்கு பிஎஸ்என்எல்லில் பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் காம்போ என்று பல்வேறு திட்டங்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








