Home
News

BSNL போட்ட போடு.. வெறும் ரூ.319-க்கு 65 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. லம்ப்-சம் டேட்டா.. எஸ்எம்எஸ் இருக்கு!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு இதைவிட என்னங்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு வெறும் ரூ.319 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில் 2 மாதங்களுக்கு மேல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் கிடைக்கின்றன. இதேபோல 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் எந்த திட்டம் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும்?

பிஎஸ்என்எல் ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 319 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா மற்றும் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, 65 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது.

BSNL போட்ட போடு.. வெறும் ரூ.319-க்கு 65 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஆனால், அதே நாட்களில் 10 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா (Post Data) கிடையாது. அதேபோல 65 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் குறையாக தெரிந்தாலும், 2 மாதங்களுக்கு மேல் வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவிட்டி கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 345 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 345 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் விலை அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகையை கொடுத்து இருக்கிறது. ஆகவே, 60 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை பெறலாம். அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 60 நாட்கள் முழுவதும் அனுப்பி கொள்ளலாம். முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகை இதிலும் கிடைக்கிறது. ஆகவே, 5 நாட்கள் வேலிடிட்டி குறைவாக கிடைத்தாலும் அதற்கு ஏற்ப டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அதிகமாக கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ 439 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 439 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா விரும்பிகளுக்கு சரியாக இருக்காது. ஆனால், சிம் ஆக்டிவிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்கா தேர்வாக இருக்கும். அதாவது, முற்றிலும் டேட்டா சலுகை கிடையாது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கொடுக்கப்படும்.

Take a Poll

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு சிம் ஆக்டிவிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இதுபோக 300 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையாக கொடுக்கப்படுகிறது.

இந்த மூன்று திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பொதுவாக கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் விலைக்கு ஏற்ப வேலிடிட்டி கொடுக்கின்றன. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே போதும், அதே நேரத்தில் சிம் கார்டு தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பக்கா தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 319 Plan With Unlimited Voice Calls 65 Days Validity 1GB Data Check Cheapest Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X