BSNL SIM வைத்து இருப்பவர்கள் அடுத்த 60 நாட்களுக்கு சைலெண்ட்டா இது பண்ணுங்க.. வாய்ஸ் கால்கள்.. 10 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்கிறது. இதில் பிஎஸ்என்எல் ரூ.319 திட்டம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
ரூ.300 கையில் இருந்தால், தனியார் டெலிகாம் நிறுவனங்களில் 1 மாதத்துக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். ஆனால், மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதிலும் 60 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (BSNL Prepaid Plan) 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) தொடர்ந்து கொடுக்கப்படும்.
அதேபோல 60 நாட்களுக்கும் மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. வழக்கமாக ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போலவே அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி மற்றும் ரேமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது.
டேட்டா சலுகை குறைவாக இருந்தாலும், வேலிடிட்டி அதிகமாக இருப்பதால், சிம் ஆக்டிவ் மலிவான விலையிலேயே கிடைத்துவிடுகிறது. இதனாலேயே அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல அதிக வேலிட்டியுடன் தினசரி டேட்டாவும் வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.599 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.
பிஎஸ்என்எல் ரூ.599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை விட அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகை கிடைக்கும். ஆகவே, இதை ரீசார்ஜ் செய்த பிறகு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவை 70 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, 210 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் மொத்தமாக கொடுக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு கிடைக்கும் 3 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவுக்கு எந்த குறையும் இருக்காது. 4ஜி சர்க்கிளில் 4ஜி வேகத்தில் கிடைக்கும்.
முந்தைய திட்டத்தில் 60 நாட்களுக்கு மொத்தமாக 300 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆகவே, 70 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை. முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கும்.
ஆகவே, 70 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டங்களில் சிம் ஆக்டிவ் மற்றும் அதிக டேட்டா அடிப்படையில் கஸ்டமர்கள் தேர்வு செய்யலாம். மலிவான விலையில் 2 மாத சிம் ஆக்டிவுக்கு முதலாவது திட்டம், அதிக டேட்டாவுக்கு 2ஆவது திட்டம் சரியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications