இறங்கி அடிச்ச BSNL.. இனிமே ரூ.319 போதும்.. 65 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 10 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.319 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க முடியாதபடி 65 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதுபோக லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. இந்த பிஎஸ்என்எல் வாய்ஸ் திட்டத்தின் (BSNL Voice Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படுவதால், டெலிகாம் கஸ்டமர்களுக்கு ஏற்ப வாய்ஸ் கால்களுக்கு தனியே திட்டங்கள், டேட்டாவுக்கு தனியே திட்டங்கள் என்று ஆரம்பத்தில் இருந்து பிஎஸ்என்எல் கொடுத்து வருகிறது. இதில் வாய்ஸ் திட்டங்கள் நம்ப முடியாதபடி அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இதில் ரூ.319 திட்டம் பட்டையை கிளப்புகிறது.

பிஎஸ்என்எல் ரூ 319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): தனியார் டெலிகாம் நிறுவனங்களில் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கிடைத்தாலும், ஒரு மாதத்துக்குள்ளேயே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தில் 65 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
அதேபோல சிம் கார்டு ஆக்டிவ் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 65 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. இது வாய்ஸ் திட்டமாக இருந்தாலும், 10 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கு பிறகும் போஸ்ட் டேட்டா வருகிறது.
ஆகவே, 65 நாட்களுக்கு முன்னதாகவே 10 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், அதற்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகள் போக 300 எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. 2 மாதங்களுக்கு மேல் கம்மியான விலைக்கு திட்டம் வேண்டுமானால், இதை பெறலாம்.
இதேபோல 90 நாட்களுக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், அந்த திட்டத்தில் முற்றிலும் டேட்டா சலுகை கிடைக்காது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே கிடைக்கும். இருப்பினும், விலை மிகவும் குறைவாக இருக்கும். இந்த பிஎஸ்என்எல் வாய்ஸ் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 439 திட்ட விவரங்கள் (BSNL Rs 439 Plan Details): இந்த திட்டமானது, மாதத்துக்கு ரூ.146 செலவில் கிடைக்கிறது. இந்த விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 3 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்யலாம்.
இதுபோக முந்தைய திட்டத்தை போலவே 300 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே இதில் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் கிடைத்தால் போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். கொஞ்சம் டேட்டா வேண்டுமானால், முதலில் பார்த்த 65 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் சரியாக இருக்கும்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல் கொடுக்கிறது. இந்த திட்டங்கள் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். டேட்டாவை விரும்பும் கஸ்டமர்களுக்கு இது சரியாக இருக்காது. அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி சேவைகளை நாடு முழுவதும் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, டேட்டா திட்டங்களும் பெரிதாக வேகம் கொடுக்காது.


Click it and Unblock the Notifications








