BSNL 4G ரெடி.. BSNL 5G சீக்கிரம் வருது.. மலிவு விலையில் 365 நாளுக்கு தினமும் 3GB டேட்டா.. எந்த திட்டம்?
மக்கள் விரும்பும் மலிவு விலையில், அதிக நன்மைகள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அள்ளி வீசி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) டெலிகாம் நிறுவனம். ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் (BSNL) தற்போது தனது நெட்வொர்க் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து வருகிறது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை லாபமாக மாற்ற பிஎஸ்என்எல் வேலை செய்து வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அக்டோபர் மாத இறுதிக்குள், பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தை முழுமையான 4ஜி வட்டமாக மாற்றிவிடும் என்று உறுதியளித்துள்ளது. இதற்கான வேலைகளை BSNL மிகவும் மும்முரமாக செய்து வருகிறது. இப்போதே இந்தியாவில் பல இடங்களில் BSNL 4G சேவைகள் கிடைக்க துவங்கிவிட்டன. இதனால், தனியார் நிறுவனங்களின் பயனர்கள் கூட இப்போது பிஎஸ்என்எல் இன் மலிவு விலை திட்டங்களை பார்த்து, மனம் மாறி வருகின்றனர்.

BSNL 4G ரெடி.. BSNL 5G இதோ வரப்போகுது.. குஷியில் இந்திய மக்கள்:
புதிய பிஎஸ்என்எல் சிம் (BSNL SIM Card) வாங்கி நெட்வொர்க் மாற்றம் செய்து பல குடும்பங்கள் இப்போதே பிஎஸ்என்எல் பயனர்களாக மாறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, பிஎஸ்என்எல் 5ஜி எப்போது கிடைக்குமென்ற தகவலையும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அக்டோபரில் 4ஜி வேலைகளை முடித்த பிறகு, நிறுவனம் 1,00,000 புதிய டவர்களை இந்தியா முழுக்க நிறுவவுள்ளது.
இந்த வேலை முடிந்த பிறகு, 6 மாதத்தில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி கிடைக்குமென்று அறிவித்துள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டில் பாதியில் இந்திய மக்கள் கட்டாயம் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால், இப்போதே பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இன் நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்ய முன்வருகிறார்கள்.
காரணம், பிஎஸ்என்எல் 5ஜி வந்த பிறகு ஒரு வேலை விலை அதிகரிப்பு ஏற்பட்டால் கூட, அடுத்த ஒரு வருடத்திற்கு பயனர்கள் இந்த திட்டத்தின் செல்லுபடியுடன் 4ஜி மற்றும் 5ஜி வேகத்தை அனுபவித்துக்கொள்ளலாம் என்பதனால் தெளிவாக இப்போது 1 வருடம் செல்லுபடியாகும் திட்டங்களை (BSNL 1 Year Validity Plan) ரீசார்ஜ் செய்கிறார்கள். இதன் மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் முரட்டுத்தனமான சவாலை முன்வைத்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid recharge plan):
பிஎஸ்என்எல் 3 விதமான நீண்ட கால திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid recharge plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா (3GB daily data) நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 80Kbps ஆக குறையும் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications