BSNL தான் கிங்கு.. 600GB டேட்டா கொடுத்து அசத்தல்.. Jio, Airtel, Vi-க்கு அடிமேல் அடி.. தொடரும் சிக்கல்..
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் யாருக்கு நல்ல நடந்ததோ நடக்கவில்லையோ தெரியலை, ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும், அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க்கிற்கு டபுள் நன்மை கிடைத்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இப்போது டபுள் சந்தோசம் கிடைத்துள்ளது. டெலிகாம் துறையில் நடக்கும் போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது சலுகைகளை அள்ளி வீசி வருகிறது.
இந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் நிறுவனம் 600GB டேட்டா நன்மையை வழங்குவதாக அறிவித்து மக்களை வியப்படைய செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த 600GB டேட்டா நன்மையால், தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடுப்பில் உள்ளனர். குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் செம கடுப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan):
காரணம், இதுவரை பல லட்சம் ஜியோ வாடிக்கையாளர்கள் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு, அவர்களின் சிம் கார்டுகளை (SIM card) போர்ட் செய்து மாறிவிட்டனர். இதை பிஎஸ்என்எல் நிறுவனமே உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் கடந்த மாதம் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.
இதில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தனியார் நெட்வொர்க்கில் இருந்து அவர்களின் மொபைல் நம்பரை அப்படியே BSNL நெட்வொர்க்கிற்கு மாற்றிக்கொண்டு, அவர்களின் சேவையை தொடர்ந்துள்ளதாக BSNL தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் நீண்ட காலத்திற்கு பிறகு பிஎஸ்என்எல் நம்பிக்கையை பெறுவதினால், மக்களை குஷியடைய செய்யும் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அப்படி அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan) ஒரு வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது முழுமையாக ஒரு ஆண்டிற்கான 365 நாள் சேவையை தடையில்லாமல் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. ஹெவி டேட்டா பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். 600GB டேட்டா தீர்ந்த பிற்பாடு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
BSNL வழங்கும் 600GB டேட்டா நன்மை:
இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் மக்கள் பெறுகிறார்கள். இது தவிர பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் உங்களுக்கு OTT நன்மை மற்றும் இதர இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 Prepaid Plan) 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சந்தாவை வழங்குகிறது.
ஈரோஸ் நொவ் எண்டெர்டைன்மெண்ட் மூலம் பயனர்கள் பல டிவி உள்ளடக்கங்கள், திரைப்படங்கள் மற்றும் சில ஆன்லைன் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம். இந்த பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan) இலவச BSNL டியூன்ஸ் சந்தாவையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








