BSNL வராரே தெறிக்கவிட போறாரே.. 365 நாள் தினமும் 3GB டேட்டா.. மலிவு விலை.. Jio, Airtel, Vi ஸ்தம்பித்தது..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) மக்கள் விரும்பும் மலிவு விலையில், அதிக நன்மைகள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அள்ளி வீசி வருகிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் (BSNL) தற்போது கவர்ந்துவருகிறது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் அசத்தலான திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் முரட்டுத்தனமான சவாலை முன்வைத்துள்ளது.
BSNL இன் திட்டங்கள் மலிவு விலையில் மட்டுமின்றி, காசுக்கு ஏற்ற பலன் என்பதை தாண்டி, கொடுத்த காசுக்கு மேற் கூடுதல் பலன்கள் கிடைக்கிறது என்று மக்கள் உணரும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய திட்டங்களில் நன்மைகள் வாரிவழங்கி வருகிறது. BSNL தற்போது நாடு முழுக்க பிஎஸ்என்எல் 4G (BSNL 4G) வெளியீட்டு சேவையை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. பிஎஸ்என்எல் இதனை தொடர்ந்து 8 மாதத்திற்குள் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சேவையை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

BSNL ரூ. 2999 திட்டம்.. 365 நாள் தினமும் 3GB டேட்டா நன்மை:
இதனால், மக்கள் இப்போது நீண்ட கால திட்டத்தை இப்போதே தேர்வு செய்ய முன்வருகிறார்கள். காரணம், பிஎஸ்என்எல் 5ஜி வந்த பிறகு ஒரு வேலை விலை அதிகரிப்பு ஏற்பட்டால் கூட, அடுத்த ஒரு வருடத்திற்கு பயனர்கள் இந்த திட்டத்தின் செல்லுபடியுடன் 4ஜி மற்றும் 5ஜி வேகத்தை அனுபவித்துக்கொள்ளலாம் என்பதனால் தெளிவாக இப்போது 1 வருடம் செல்லுபடியாகும் திட்டங்களை (BSNL 1 Year Validity Plan) ரீசார்ஜ் செய்கிறார்கள்.
இத்தகைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த திட்டம் தான் BSNL ரூ.2,999 திட்டம். இது ஒரு ஆண்டு தடையில்லா சேவையை தினமும் 3ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. BSNL ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டம் ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிவேக டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது ஆன்லைன் வேலை, ஸ்ட்ரீமிங் மற்றும் எண்டெர்டைன்மெண்ட் பயன்பாட்டிற்கு ஏற்றது. தினசரி டேட்டா வரம்பை அடைந்த பிறகு, டேட்டாவின் வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. மும்பை மற்றும் டெல்லி MTNL பகுதிகளில் இந்த திட்டம் 395 நாட்கள் செல்லுபடியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க தினசரி தரவு தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டம் சரியானது.
ரூ. 11 முதல் ரூ. 3000 வரை ரீசார்ஜ் திட்டம்.. Jio, Airtel, Vi ஸ்தம்பித்தது:
ஒவ்வொரு நாளும் 3ஜிபி அதிவேகத் தரவு கிடைப்பதால், உங்கள் இணைப்புத் தேவைகள் சமரசம் இல்லாமல் பூர்த்தி செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது. அடிக்கடி மாதாந்திர ரீசார்ஜ் செய்வதால் சோர்வடைவோருக்கு, BSNL 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் (BSNL 365 Days Validity Plan) ரூ. 2999 திட்டம் ஒரு சிறந்த வருடாந்திர திட்டமாக செய்லடுகிறது. இந்தத் திட்டம், தொடர்ச்சியான ரீசார்ஜ்களின் தொந்தரவு இல்லாமல் நீண்ட கால பலன்களைத் தேடும் பயனர்களுக்கு வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.11 முதல் ரூ.3,000 வரை பலதரப்பட்ட திட்டங்களை வழங்குகிறது. இதனால், Jio, Airtel, Vodafone Idea அல்லது Vi போன்ற நிறுவனங்கள் ஸ்தம்பித்துள்ளன. உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தைக் கண்டறிய, நீங்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதன் சலுகைகளை ஆராயலாம்.


Click it and Unblock the Notifications








