Home
News

BSNL நெத்தியடி.. குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா.. 365 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. ஜியோ ஓரம்போ..

தனியார் டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் கடந்த மாதம் தொடக்கத்தில் விலை உயர்வை அறிவித்தன. அப்போது முதல் இப்போது வரை பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலை வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ஒரு அசத்தலான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL நெத்தியடி.. 365 நாள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் இதுபோன்ற திட்டங்களை வைத்துள்ளன. ஆனால் அந்த திட்டங்கள் குறைவான டேட்டா நன்மையைத் தான் வழங்குகின்றன.

ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 3599 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என நிறுவனம் கூறுகிறது.

BSNL நெத்தியடி.. 365 நாள் வேலிடிட்டி, வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல்ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar)சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music),அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

எனவே ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட குறைந்த விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2999 Plan With 365 Days Validity, 1095GB Data, Unlimited Voice Calls Cheapest One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X