BSNL அறிவிப்பு.. 365 நாளுக்கு தினமும் 3GB டேட்டா யூஸ் பண்ணிக்கோங்க.. தலையில் அடித்துக்கொள்ளும் Jio, Airtel, Vi
இந்தியாவில் இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்க முடியாத ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை, அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) வழங்கி அசத்தியுள்ளது. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தை பார்த்து, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் தலையில் அடித்துக்கொள்கிறது. தனியார் நிறுவனங்கள் கூட தர முடியாத அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது தினசரி 3GB டேட்டாவுடன் ஒரு வருட திட்டத்தை வழங்கியுள்ளது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கூட, பிஎஸ்என்எல் வழங்கிய திட்டம் போன்ற ஒரு திட்டத்தை வழங்க முடியவில்லை. இப்போது வரை தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பெரும்பாலும் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டங்களில் மட்டுமே தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கி வருகின்றன.

365 நாளுக்கு தினமும் 3GB டேட்டா யூஸ் பண்ணிக்கோங்க BSNL அறிவிப்பு:
இருப்பினும், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற எந்தவொரு தனியார் டெலிகாம் நெட்வொர்க்கும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்களில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்யவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரையில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நெட்வொர்க் மட்டுமே இப்போது 365 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா கிடைக்கும் திட்டத்தை வழங்கியுள்ளது.
ஆம், 1 வருடத்திற்கு தினமும் 3ஜிபி அதிவேக டேட்டா சேவை கிடைக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஹெவி டேட்டா யூசர்களை கவரும் விதத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளதால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற நிறுவனங்கள் இப்போது பீதியில் புதைந்துள்ளனர். இத்தகைய திட்டம் இந்தியாவில் வேறெந்த டெலிகாம் நிறுவனமும் வழங்கவில்லை என்பதனால், இது தனித்து நிற்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan):
சரி, இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த புதிய பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan) பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டம் 1 வருடம் செல்லுபடியாகும் முழுமையான வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது, 365 நாட்களுக்கு நீங்கள் ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், இந்த திட்டம் உங்களுக்கு 1 வருட செல்லுபடியை வழங்குகிறது.
இந்த பிஎஸ்என்எல் ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 Prepaid Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் STD அழைப்புகள் என்று எல்லாமே இலவசமாகவும், அன்லிமிடெட்டாகவும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அக்டோபர் இறுதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுக்க அதன் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டை முழுமையான 4ஜி வட்டமாக மாற்றும் வேலைகளை நிறுவனம் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இத்தகைய திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொண்டால், பயனர்கள் அடுத்த ஆண்டு வரை எந்த விலை மாற்றமும் இல்லாமல் தினசரி 3GB டேட்டாவை 4ஜி வேகத்துடன் அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








