முடிச்சு விட்ட BSNL.. மாதத்துக்கு ரூ.230 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio) நிறுவனத்தை மிரளவிடும் விதமாக மாதத்துக்கு ரூ.230 செலவில் 13 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ 2999 திட்ட விவரங்கள் (BSNL Rs 2999 Plan Details): ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்த்தாலும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையே கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 1,095 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த 3 ஜிபி டேட்டாவை முழுமையாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்திவிட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கும் லிமிட்டே கிடையாது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, ஒரு வருடத்துக்கு எந்தவொரு திட்டமும் தேவைப்படாது.
இந்த வேலிடிட்டியே பிரம்மாண்ட சலுகையாக இருக்கும் வேளையில் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம் பிஎஸ்என்எல் நிறுவனம் அந்த சலுகையை கொடுத்து வருகிறது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், இந்த சலுகையை வழங்குகிறது.

வரவிருக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரையில் பிஎஸ்என்எல் ரூ 2999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு திட்டத்தின் வேலிடிட்டியான 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, இந்த 30 நாட்களில் 90 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், 3000 எஸ்எம்எஸ் சலுகைகள் முற்றிலும் ப்ரீயாக கிடைக்கிறது.
இந்த திட்டத்துக்கு மொத்தமாக 13 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும்பட்சத்தில், ஒரு மாதத்துக்கான செலவை பார்த்தால் வெறும் ரூ 230 மட்டுமே தேவைப்படுகிறது. எப்படி பார்த்தாலும், இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாகவே இருக்கும். ஏனென்றால், 4ஜி சேவைக்கு பிறகு திட்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆகவே, இப்போதே ரீசார்ஜ் செய்துவிட்டால், அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் 4ஜி சேவையை இந்த திட்டங்கள் மூலமே பெற்று கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதைவிட கம்மியான விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ 1999 விலையில் கிடைக்கும் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஓடிடி சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதில் மொத்தமாக 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகையாகும்.
ஆகவே, தினசரி லிமிட் இல்லாமல், எப்போது வேண்டுமாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகு 80 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்யலாம். நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.
இந்த 365 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் முதல் 30 நாட்களுக்கு ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) சப்ஸ்கிரிப்சன் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சப்ஸ்கிரிப்சன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு மாதத்துக்கு வெறும் ரூ.166 மட்டுமே தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications








