1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.. BSNL அள்ளித்தரும் 1095GB டேட்டா.. வாய்ஸ்.. SMS நன்மை.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ஒரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ஒரு வருடம் முழுக்க உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 3GB டேட்டா நன்மை கொண்ட திட்டம் இதுவாகும். இந்த திட்த்துடன் கிடைக்கும் நன்மைகள் மற்றும் முழு விபரங்கள் பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம்.
இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது மலிவு விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், என்ற அடிப்படையில் 365 நாள் செல்லுபடியுடன் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

1 வருடம் முழுக்க நீண்ட காலத்திற்கு பலனை அனுபவிக்கும் BSNL வடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்கும் 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹெவி டேட்டா யுஸர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது போல் தெரிகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டமானது, பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan) என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை இப்போது வழங்க துவங்கியுள்ளது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மையை வாரி வழங்குகிறது. இதுவொரு ஹை ஸ்பீட் டேட்டா நன்மை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது இந்தியாவின் பல இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ளதால், இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மையானது 4ஜி வேகத்துடன் பயன்படுத்த கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மொத்தமாக அதன் பயனர்களுக்கு 1095GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த BSNL 2999 Plan உடன் கிடைக்கும் தினசரி 3GB டேட்டா நன்மை தீர்ந்த பிறகு, டேட்டாவின் வேகம் குறைக்கப்படும்.
BSNL வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி, பிஎஸ்என்எல் ரூ 2999 திட்டத்துடன் கிடைக்கும் தினசரி 3GB டேட்டா நன்மை தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த 40 Kbps வேகத்துடன் பயனர்கள் நள்ளிரவு 12 மணி வரை அன்லிமிடெட் டேட்டா நன்மையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி நள்ளிரவு 12 மணிக்கு மேல் மீண்டும் 3GB டேட்டா கிடைக்கும் என்பதனால் சிக்கல் எதுவுமில்லை. இந்த நன்மை உடன், பிஎஸ்என்எல் நிறுவனம் 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை தடையில்லாமல் வழங்குகிறது. லோக்கல், எஸ்டிடி மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் என்று அணைத்து வகையான அழைப்பு நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்த BiTV சேவையும் இந்த திட்டத்துடன் பயன்படுத்த கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல் உள்ளடக்கங்களை நீங்கள் இப்போது உங்கள் மொபைல் போன் மூலம் கண்டு மகிழலாம். இதற்கு டேட்டா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








