இவ்ளோ கம்மி விலையில் 3ஜிபி டேட்டாவா? அசத்தும் BSNL: இனி இதைத்தான் ரீசார்ஜ் செய்வீங்க!

|

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக ஏர்டெல், ஜியோ நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம்.

4ஜி சேவை

4ஜி சேவை

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது
இந்திய முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் கம்மி அதிக டேட்டா
நன்மையை வழங்கும் ஒரு திட்டத்தை வைத்துள்ளது.

அந்த திட்டம் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தான். இப்போது அந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி-ஐ பார்ப்போம்.

Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

 பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு மாதம் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சிறப்பான நன்மைகள் கிடைக்கிறது.

அதேபோல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 80 Kbps ஆகக் குறைகிறது. ஆனாலும் இந்த சூப்பரான திட்டத்தில் OTT நன்மைகள் ஏதும் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறை.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அருமையான திட்டங்களைப் பார்ப்போம்.

Iphone-க்கு ஓனராக சரியான வாய்ப்பு: பிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியுன் ஐபோன் 11, ஐபோன் 12!Iphone-க்கு ஓனராக சரியான வாய்ப்பு: பிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியுன் ஐபோன் 11, ஐபோன் 12!

பிஎஸ்என்எல் ரூ.228 பிளான்

பிஎஸ்என்எல் ரூ.228 பிளான்

பிஎஸ்என்எல் ரூ.228 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், போன்ற சிறப்பான நன்மைகளும் ரூ.228 திட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 80kbps ஆக குறையும். குறிப்பாக Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்.

200எம்பி மெயின் கேமரா: அதிகம் எதிர்பார்த்த Moto X30 Pro ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?200எம்பி மெயின் கேமரா: அதிகம் எதிர்பார்த்த Moto X30 Pro ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?

 பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் பிளான் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் போன்ற பல நன்மைகள் உள்ளன.

அதேபோல் இந்த ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 80kbps ஆக குறையும். மேலும் கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம்.

1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான் ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு 200 நிமிடங்கள் இலவச அழைப்பு நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர 3ஜிபி டேட்டா, 50 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் அணுகலும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் பிளான்.

அதேபோல் சமீபத்தில் இரண்டு பெரிய ப்ரீபெய்ட் திட்டங்களை நன்மைகளை குறைத்து பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

Airtel பயனர்களே இந்த 6 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் தான் இப்போ பெஸ்ட்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Airtel பயனர்களே இந்த 6 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் தான் இப்போ பெஸ்ட்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 240 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 200 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

ரூ.999 ப்ரீபெய்ட் பிளானில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 200 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 2 மாதங்களுக்கு இலவச PRBT அணுகலும் உள்ளன. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா நன்மைகள் இல்லை.

ஓ மை காட்! Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை இதானா? 33W பாஸ்ட் சார்ஜிங் உண்மையாவே இருக்கா?ஓ மை காட்! Nothing Phone 1 மீது கிடைக்கும் சலுகை இதானா? 33W பாஸ்ட் சார்ஜிங் உண்மையாவே இருக்கா?

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், 24ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 299 prepaid plan suitable for heavy data users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X