அடேங்கப்பா.. இவ்ளோ கம்மி விலையில் 3ஜிபி டேட்டாவா? இந்த BSNL திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க..
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்த மாதம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்றும், அடுத்த ஆண்டு 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்ய உள்ளதாக பிஎஸ்ன்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு கம்மி விலையில், அதுவும் ரூ.300-க்கு கீழ் 3ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு அசத்தலான திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு மாதம் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சிறப்பான நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைகிறது. ஆனாலும் இந்த சூப்பரான திட்டத்தில் OTT நன்மைகள் ஏதும் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறை. மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த சில அருமையான திட்டங்களைப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் BSNL ட்யூன்களுக்கான அணுகலை வழங்கும் இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்எனஎல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதிலும் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை என்று அனைத்து நன்மைகளும் வழங்கப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள ரூ. 184 மற்றும் ரூ. 185திட்டங்களில் கிடைக்கும் பலன்கள் இதில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இது BSNL ட்யூன்ஸ் மற்றும் ஹார்டி கேம்களுக்கான அணுகலை மட்டும் கூடுதலாகப் பெறுகிறது. வழக்கம் போல நிறுவனம் வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக மாற்றப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.


Click it and Unblock the Notifications








