இனி ரூ.299 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. அள்ளி தரும் BSNL.. வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போதும் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் சமீபத்தில் தான் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெயட் திட்டம் ஆனது அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் கிடைக்காது. ஒருவேளை கம்மி பட்ஜெட்டில் அதிக வேலிடிட்டி வேண்டும் என்றால் ரூ.485 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த இரண்ட திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








