ரூ.299 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகளுடன் அசத்தும் BSNL திட்டம்.. வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையைக் கொண்டுவந்துவிட்டது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையைக் கூட வழங்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, அடுத்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இப்போது அந்த குறைந்த விலை திட்டத்தைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தான் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது.
குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி அல்லது 1.5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தான் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான கம்மி விலை ப்ரீபெயட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின்; ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை மற்றும் பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 டாக்டைம் கூட உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் கிடைக்கும் 50ஜிபி டேட்டாவை பயனரால் ஒரே நேரத்தில் அல்லது 50 நாட்களில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளின் பயன்களையும் பெறமுடியும்.
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 28நாட்கள் செல்லுபடி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ட்யூன்களும் தொகுத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயனர்கள் எந்த வரம்பும் இல்லாமல் பாடல்களை கேட்கலாம். இதுதவிர ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை, அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








