Home
News

BSNL ஆட்டமே வேற.. ரூ.299-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்கள் வருது!

இந்த விலைக்கு இப்படியா? என்று மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) சலுகைகளை கொடுக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த விலைக்கு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் 3 ஜிபி திட்டங்கள் கிடையாது. இந்த 3ஜி டேட்டா திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டியில் இந்த மூன்று சலுகைகளையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது.

BSNL ஆட்டமே வேற.. ரூ.299-க்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. நாளொன்றுக்கு 3ஜிபி!

இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு நாளுக்கு ஒதுக்கப்பட்ட 3 ஜிபி டேட்டாவை அன்றைய நாள் முடிவதற்குள் பயன்படுத்திவிட்டாலும், அடுத்த நாளுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும் வரையில் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, டேட்டாவில் கவலையிருக்காது.

ஏனென்றால், 30 நாட்களுக்கு மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. இந்த டேட்டா எப்படி கிடைக்கிறதோ அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு 100 என்னும் கணக்கில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் சலுகைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் எந்தவித குறையும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த 30 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இப்படி அதிகப்படியான சலுகைகளை வெறும் ரூ.300 விலைக்கு கொடுக்கிறது. இந்த விலையில் 30 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைப்பது நல்ல சலுகையாகவே இருக்கிறது.

இதேபோல சலுகையுடன் 2 ஜிபி டேட்டா போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு திட்டம் பக்காவாக கிடைக்கிறது. இந்த திட்டம் விலையிலும் குறைவாக கிடைக்கிறது. இதிலும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 228 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 228 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் அல்ல ஒரு மாத கணக்கில் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, நீங்கள் ரீசார்ஜ் செய்யும் மாதத்தை பொறுத்து 30 நாட்கள் அல்லது 31 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த மாதாந்திர திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம், முந்தைய ப்ரீபெய்ட் திட்டத்தில் பார்த்ததை போலவே இதிலும் ஃபேர் யூசேஜ் பாலிசி சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா சலுகை உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 299 Prepaid Plan Offer 30 Days Validity 3GB Data Unlimited Voice Calls Affordable Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X