Home
News

BSNL சிம் இருக்கா? ரூ.300 இறக்கியாச்சு.. 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. குஷியில் கஸ்டமர்கள்!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) கனவிலும் கிடைக்காத அடிமட்ட விலையில் 3 ஜிபி டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் (BSNL) களமிறக்கி இருக்கிறது. ரூ.300 -க்கும் கம்மியான ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா (3GB Data) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. அதிக டேட்டா தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தைவிட மலிவான விலையில் வேறு திட்டம் கிடைக்காது. இதுகுறித்த விவரம் இதோ.

ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தும் கஸ்டமர்களும் அதிக டேட்டா கொண்ட திட்டங்களையே ரீசார்ஜ் செய்கின்றனர். டெலிகாம் நிறுவனங்கள் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கின்றன. ஆனால், விலையும் அதற்கு ஏற்ப அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல்லில் அப்படி இல்லை.

BSNL சிம் இருக்கா? ரூ.300 இறக்கியாச்சு.. 3 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்!

அடிமட்ட விலைக்கு 3 ஜிபி டேட்டா திட்டங்களை கொடுக்கிறது. இதில் மிகவும் மலிவான விலையாக ரூ.299 திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அதிகப்படியான டேட்டா மட்டுமல்லாமல், போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையையும் பேக் செய்து கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் (BSNL Plan) 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 3 ஜிபிக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) மூலம் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது.

ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதேபோல தினசரி எஸ்எம்எஸ் சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை 30 நாட்களுக்கும் செய்து கொள்ள முடியும். இதைவிட அதிக வேலிடிட்டி கொண்ட திட்டம் 3 ஜிபி டேட்டாவுடன் வேண்டுமானால், ரூ.599 விலையில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி, கேமிங் பிரியர்களுக்கான கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ 599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் டேட்டா பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கும் அதிக சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

அதேபோல 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகை போக ஓடிடி பிரியர்களுக்கான வாவ் எண்டர்டெயின்மெண்ட் (Wow Entertainment) சந்தா கிடைக்கிறது. மேலும், லைஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podcast) பயன்படுத்தலாம். இதுபோக ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arina Games) மற்றும் கேமியம் (Gamium) வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் ஜிங்க் மியூசிக் (Zing Music) சலுகை வருகிறது. கேம் ஆன் (GameON) மற்றும் ஹார்டி கேம்ஸ் (Hardy Games) சலுகையும் இருக்கிறது. இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும 100 எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 299 Plan With Unlimited Voice Calls 3GB Daily Data 30 Days Validity Check Cheapest 3GB Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X