Home
News

BSNL ஒரே போடு.. ரூ.300-க்கு இறக்கியாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. 30 நாட்களுக்கு வேலிடிட்டி!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலையையும் சலுகையையும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் விலையில் பிஎஸ்என்எல் 3 ஜிபி டேட்டாவை (3GB Data) கொடுக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகைகளையும் கொடுக்கிறது. இத்திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 299 திட்டம் (BSNL Rs 299 Plan): பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு ஒரு மாதத்துக்கு அதிகப்படியான டேட்டா சலுகைகளுடன் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், இந்த திட்டத்துக்கு செல்லலாம். ஏனென்றால், மற்ற நிறுவனங்கள் இதே விலைக்கு 1.5 ஜிபி அல்லது 1 ஜிபி ஜிபி டேட்டாவை மட்டுமே தினசரிக்கு கொடுக்கின்றன.

BSNL ஒரே போடு.. ரூ.300-க்கு இறக்கியாச்சு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்!

ஆனால், இந்த பிஎஸ்என்எல் திட்டம் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியாவில் இந்த விலைக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வருகிறது. ஆகவே, வேலிடிட்டி மற்றும் டேட்டாவில் அதிகப்படியான சலுகைகளை இந்த திட்டத்தில் பெறலாம்.

30 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 90 ஜிபி டேட்டாவையும், தினசரி டேட்டா 3 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். மற்ற சலுகைகள் வழக்கமாக கிடைப்பதை போலவே இருக்கின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் செய்யலாம்.

இந்த அன்லிமிடெட் சலுகையில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) சலுகைகளும் அடங்கும். இந்த சலுகைகளையே இந்த பிஎஸ்என்எல் ரூ 299 திட்டம் கொடுக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு 3 ஜிபி டேட்டா மற்ற நிறுவனங்களில் கிடைக்காது. ஆகவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவில் இதே விலைக்கும் கிடைக்கும் சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ ரூ 299 திட்டத்தில் (Jio Rs 299 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ 299 திட்டத்தில் (Airtel Rs 299 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. வோடபோன் ஐடியா ரூ 299 திட்டத்திலும் இதேபோல சலுகைகள் கிடைக்கிறது.

ஆனால், பிஎஸ்என்எல் ரூ 299 திட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது அப்படியே டபுள் டேட்டா சலுகையாக இருக்கிறது. நாடு முழுவதும், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கும் பகுதிகளில் இந்த திட்டமானது மற்ற நிறுவனங்களை ஓரம்கட்டும்படி இருக்கிறது. விலையின் அடிப்படையில் லாபமான திட்டமாகும்.

இதேபோல மற்றொரு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்திலும் லாபமான சலுகைகள் கிடைக்கின்றன. இதில் 2 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால், விலை ரூ.100 கம்மியாக கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ 199 திட்டம் (BSNL Rs 199 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது முந்தைய திட்டத்தைவிட ரூ.100 விலை கம்மியாக கிடைக்கிறது. இதற்கு ஏற்ப 30 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் கால்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 299 Plan With Unlimited Voice Calls 3GB Daily Data 30 Days Validity Cheapest More Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X