BSNL வொர்த்து சார்.. ரூ.299-க்கு யாரும் கொடுக்காத செட்டில்மென்ட்.. 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடடெ வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கனவிலும் கிடைக்காத விலைக்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்கிறது. நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்கியும், ப்ரீபெய்ட் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே மலிவு விலைக்கு கொடுக்கிறது. அதிலும் தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டத்தை ரூ.300 விலைக்கும் கீழ் வழங்குகிறது. இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா (3GB Data) கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இந்த டேட்டா 4ஜி கஸ்டமர்களுக்கும் பொருந்தும்.

ஆகவே, 3ஜி மட்டுமல்லாமல், 4ஜி சர்க்கிள்களில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் இந்த 3 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. ஆகவே, மற்ற நிறுவனங்களைவிட அதிகப்படியான டேட்டா இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொடுப்பதால், 60 ஜிபி டேட்டாவை மொத்தமாக கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடிகிறது.
இதுபோக போஸ்ட் டேட்டா உள்ளது. இப்போது, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இதில் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதை நாளொன்றுக்கு அனுப்பி கொள்ளலாம். வாய்ஸ் கால்களுக்கு எந்த குறையும் கிடையாது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை செய்து கொள்ளலாம்.
மேலும், நேஷனல் ரோமிங் வாய்ஸ் (National Roaming Voice) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே இந்த திட்டம் மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது. இதேபோல பல்வேறு திட்டங்களில் அதிகப்படியான டேட்டா சலுகைகளை கொடுக்கிறது. 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டவுடன் புதிதாக ஒரு திட்டம் வந்தது.
இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இதன் விலையும் மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட மலிவாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 4ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 225 திட்ட விவரங்கள் (BSNL Rs 225 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த விலைக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களில் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களின் விலையில் இந்த 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, 30 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் பார்த்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் இதிலும் கிடைக்கிறது. அதேபோல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் புதிய கஸ்டமர்களை சேர்த்த டெலிகாம் நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், ஏர்டெல் நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 13.85 லட்சம் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்லுக்கு சென்றுள்ளனர். அதுவே ஏர்டெல்லில் 4.96 லட்சம் கஸ்டமர்கள் சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications








