Jio, Airtel-ஐ ரூ.299-க்கு முடித்த BSNL.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா.. 30 நாட்கள் வேலிடிட்டி!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்காத விலைக்கு தினசரி டேட்டா மற்றும் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுத்து இருக்கிறது. ரூ.300 விலைக்கும் கீழ் அதிக டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் திட்டமாகவும் இது இருக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா கொண்ட திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். 40 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

இதை 3 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 30 நாட்களில் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகளை இதே விலைக்கு தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் பெற முடியாது.
இதைவிட அதிக வேலிடிட்டி மற்றும் 2 ஜிபி டேட்டா மட்டுமே போதுமானால், இதை விட மலிவான விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் விலை ரூ.249 ஆக இருக்கிறது. 35 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ.249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 35 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இது முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக 4 நாட்கள் கிடைப்பதாகும். ஆனால், டேட்டாவில் நாளொன்றுக்கு 2 ஜிபி மட்டுமே கிடைக்கும். ஆகவே, 70 ஜிபி டேட்டாவை மட்டுமே மொத்த வேலிடிட்டிக்கு பயன்படுத்தி இருக்க முடியும்.
இந்த வேலிடிட்டி மற்றும் டேட்டாவை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, 35 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் அனுப்பி கொள்ள கிடைக்கும். இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு பெஸ்ட் திட்டம் இருக்கிறது.
இது காலண்டர் மாதாந்திர ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது. அதாவது, எந்த மாதத்தில் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்யப்படுகிறோ அடுத்த மாதம் அதே தேதி வரையில் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆகவே, 30 நாட்கள் கொண்ட மாதத்தில் 30 நாட்களும், 31 நாட்கள் கொண்ட மாதத்தில் 31 நாட்களும் வேலிடிட்டி கிடைக்கும். 28 நாட்கள் கொண்ட மாதத்துக்கு 28 நாட்கள் மட்டுமே கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.239 திட்ட விவரங்கள் (BSNL Rs 239 Plan Details): இது முந்தைய திட்டத்தைவிட ரூ.10 விலை கம்மியாக கிடைக்கிறது. அதேபோல 5 நாட்கள் வேலிடிட்டி குறைவாகவும் கிடைக்கிறது. இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, மாதம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இதில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 2 ஜிபி டேட்டாவை தினசரிக்கு பயன்படுத்தலாம். இதுபோக ரூ.10 மதிப்பில் டாக்டைம் வேல்யூ கொடுக்கப்படும். இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளின் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications