BSNL ஆட்டமே வேற.. அடுத்த 30 நாட்கள் இதுதான்.. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
டெலிகாம் மார்கெட்டில் 30 நாட்கள் வேலிடிட்டியில் நாள்தோறும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பெற வேண்டுமானால், தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ரூ.300 கீழ் திட்டங்கள் கிடையாது. ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் மட்டும் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டங்களின் விலை மற்ற நிறுவனங்களில் ரூ.300 விலைக்கும் மேல் மட்டுமே இருக்கின்றன. அன்லிமிடட் 5ஜி டேட்டாவை கொடுத்தாலும், 4ஜி கஸ்டமர்களாக இருப்பவர்களுக்கு விலை கொஞ்சம் கூடுதலாகவே தோன்றுகிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம், அதை ரூ.299 விலைக்கு கொடுத்து, கஸ்டமர்களை தட்டித் தூக்கி இருக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் குறிப்பிட்ட பகுதிகளில் கிடைத்தாலும், 4ஜி கஸ்டமர்கள் மட்டுமல்லாமல் மற்ற கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் விலை குறைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 90 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. இதுபோக வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.299 திட்ட விவரங்கள் ( BSNL Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 90 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். நாளொன்றுக்கு கிடைக்கும் 3 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு அடுத்த நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் இந்த பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம் கொடுத்துள்ளது. வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல சலுகைகளை ஜியோவில் பெற விரும்பினால், எவ்வளவு செலவாகும் தெரியுமா?
ஜியோ ரூ.449 திட்ட விவரங்கள் (Jio Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால், இதில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படும்.
64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படும். இதுபோக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும். இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஜியோ ஏஐ கிளவுட் சலுகையில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். ஜெமினி ப்ரோ திட்டம் வழியாக 5 டிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா கிடைக்கும்.
மற்ற சலுகைகளை பார்த்தால், முந்தைய திட்டத்தை போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அதிக சலுகைகள் கிடைப்பது உண்மைதான். ஆனால், விலையும் அதற்கு ஏற்ப இருக்கிறது. ஆகவே, கையில் இருக்கும் ரூ.300 வைத்து 3 ஜிபி டேட்டாவை பெற வேண்டுமானால் பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம் சரியான தேர்வுதான்.


Click it and Unblock the Notifications