Home
News

BSNL செம்ம போடு.. இனி ரூ.299 க்கு முடிந்தது.. 3 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 30 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதில் பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. அதிகப்படியான தினசரி டேட்டாவை கொடுத்து உள்ளது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் போஸ்ட் டேட்டாவும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்துக்கு செல்லலாம். ஏனென்றால், இதில் தினசரிக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

BSNL செம்ம போடு.. இனி ரூ.299 க்கு முடிந்தது.. 3 ஜிபி டேட்டா.. வாய்ஸ்!

பிஎஸ்என்எல் ரூ. 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): மற்ற நிறுவனங்களை போல 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்காமல், 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுத்துள்ளது. இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

ஆகவே, 90 ஜிபி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD, Roaming Voice Calls) இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையைும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. இதே சலுகைகள் மற்ற நிறுவனத்தில் கூடுதல் விலையில் கிடைக்கும்.

ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனமானது, மலிவான விலைக்கு கொடுத்து இருக்கிறது. இவ்வளவு டேட்டா வேண்டாம், வேலிடிட்டி மட்டும் அதிகமாக கிடைத்தால் போதும், அதேபோல வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் இருக்க வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ. 319 திட்ட விவரங்கள் (BSNL Rs 319 Plan Details): முந்தைய திட்டத்தைவிட ரூ.10 மட்டுமே விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், முந்தைய திட்டத்தில் கிடைத்த வேலிடிட்டி இதில் டபுளாக கிடைக்கும். அதாவது, முன்பு பார்த்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இதில் 60 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா குறைவாக கிடைக்கும்.

இந்த 60 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் மொத்தமாகவே 10 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டத்தில் கிடைத்த 40 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகளும் தினசரிக்கு கிடைக்காது. மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ்கள் மட்டுமே ஒதுக்கப்படும்.

இதை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாய்ஸ் கால்கள் சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளை மட்டுமே பிஎஸ்என்எல் ரூ. 319 திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். இதைவிட கம்மி விலைக்கு மற்றொரு திட்டம் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 247 திட்ட விவரங்கள் (BSNL Rs 247 Plan Details): இதில் 50 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், கூடுதலாக ரூ.10 டால்க் வேல்யூ கொடுக்கப்படும். 30 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 299 Plan 30 Days Validity 3GB Data Unlimited Local STD Roaming Calls Check Best Monthly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X