BSNL போட்டப்போடு.. மாதாந்திரம் ரூ.249 போதும்.. 395 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 10ஜிபி டேட்டா!
ஜியோ மிரளும் விதமாக மாதாந்திரம் வெறும் ரூ.249 செலவில் 13 மாதங்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 10 ஜிபி டேட்டா சலுகையை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரம் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 2988 திட்ட விவரங்கள் (BSNL Rs 2988 Plan Details): இதுவொரு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டமாகும். இந்த திட்டத்தில் டேட்டாவைவிட வாய்ஸ் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெற்றால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

இதற்காக லேண்ட்-லைன் கனெக்சன் பெற்று கொள்ள வேண்டும். அதேபோல 10 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
இந்த திட்டத்துக்கு மாதம் ரூ 249 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், இந்த பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டத்தை பெறும் புதிய கஸ்டமர்களுக்கு கூடுதலாக 1 மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தமாக 13 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ள முடியும்.
குறைவான வேகத்தில் 395 நாட்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளை வழங்கும் இந்த திட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் கம்மியான விலைக்கே கிடைக்கிறது. ஒருவேளை அதிகப்படியான டேட்டா சலுகை வேண்டுமானால், ரூ 3948 விலை கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 3948 திட்ட விவரங்கள் (BSNL Rs 3948 Plan Details): இந்த பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டத்திலும் 13 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற்றால், டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை துளியும் பற்றாக்குறை இன்றி பயன்படுத்த முடியும்.
இந்த திட்டத்தில் 20 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த வேகத்தில் அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதை ஒரு நாளுக்கு கணக்கிட்டு பார்த்தால் 2.73 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கு டெய்லி லிமிட் கிடையாது.
13 மாத வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும், பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை பயன்படுத்தலாம். இந்த பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ 329 மட்டுமே தேவைப்படுகிறது. இதேபோன்ற சலுகைகளுடன் ஓடிடி சந்தாவும் வேண்டுமானால், ரூ 7,992 விலை கொண்ட திட்டத்துக்கு செல்லுங்கள்.
பிஎஸ்என்எல் ரூ 7992 திட்ட விவரங்கள் (BSNL Rs 7992 Plan Details): இந்த திட்டத்தில் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த வேகத்தில் அதிகபட்சமாக 3,300 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. இதுபோக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ட (Disney+ Hotstar) ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதை 1 வருடத்துக்கு பயன்படுத்தலாம். இருப்பினும், 13 மாதங்கள் வேலிடிட்டியை இந்த ஃபைபர் திட்டம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








