கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வேலிடிட்டி வழங்கும் திட்டங்கள்.! கெத்து காட்டும் BSNL.!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது.

அதேசமயம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூட அதிக நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
குறிப்பாக இந்நிறுவனம் சில கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் கனவிலும் நினைச்சுபார்க்க முடியாத வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதாவது தனியார் நிறுவனங்கள் கூட இவ்வளவு கம்மி விலை திட்டங்களில் அதிக
வேலிடிட்டி-ஐ வழங்கவில்லை. ஆனால் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இப்போது அந்த திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. சார்ஜ் ஆப்ஸ் அல்லது போர்ட்டல்கள் மூலம் இந்தத் திட்டத்தைப் பயனர் நேரடியாக ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.319 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.319 திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 65 நாட்கள் ஆகும். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.319 திட்டம் ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.347 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Challenges Arena Mobile Gaming Service உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.395 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 71 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது.

பிஎஸ்என்எல் 4ஜி எப்போது?
அதேபோல் சமீபத்தில் ட்விட்டரில் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் 4ஜி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான விஷயம். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது.

தனியார் முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது
பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகமாகும், ஆனால் நாடு முழுவதும் கிடைக்க இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம். அதாவது இப்போது தான் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்க்கை மேம்படுத்த பல முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல் 4ஜி சேவையை வழங்க சில தனியார் முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications