கொளுத்திய BSNL.. வெறும் ரூ.298 போதும்.. 52 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. OTT சந்தா.. 52GB டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களே மிரளும்படி வெறும் ரூ 298 திட்டத்தில் 52 நாட்கள் வேலிடிட்டி, 52 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனையும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ 247 திட்ட விவரங்கள் (BSNL Rs 247 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 50 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு டெய்லி லிமிட் கிடையாது. வேலிடிட்டி நாட்களில் எப்போதும் வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தலாம். அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் (Eros Now Entertainment) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த சப்ஸ்கிரிப்ஷனை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 269 திட்ட விவரங்கள் (BSNL Rs 269 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா சலுகை அல்லாமல் தினசரி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதேபோல முந்தைய திட்டத்தில் கிடைக்கும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நளொன்றுக்கு 2 ஜிபி வீதம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும்.
முந்தைய திட்டத்தை போலவே ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹர்டி மொபைல் கேம்ஸ் (Hardy Mobile Games), சேலன்ஜஸ் அரினா மொபைல் கேமிங் சர்வீஸ் (Challenges Arena Mobile Gaming Service), ஜின்ங் (Zing), அஸ்ட்ரோசெல் (Astroce) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
பிஎஸ்என்எல் ரூ 298 திட்ட விவரங்கள் (BSNL Rs 298 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய 2 திட்டங்களைவிட கூடுதல் வேலிடிட்டி சலுகை கொடுக்கப்படுகிறது. இருப்பினும், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் வழங்கப்படுகிறது.
ஆகவே, மொத்தமாக 52 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். தினசரி 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.
முந்தைய 2 திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை மற்றும் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 52 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை வேலிடிட்டி விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். அதேபோல லம்ப்-சம் டேட்டாவுக்கு முதல் திட்டத்தையும், தினசரி டேட்டாவுக்கு 2ஆவது திட்டத்தையும் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








