Home
News

பட்டைய கிளப்புது BSNL.. ரூ.300 விலைக்குள் 52 நாள் வேலிடிட்டி திட்டம்.. சமரசமே இல்லாத நன்மை.. எந்த பிளான்?

பல வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பி.எஸ்.என்.எல். (BSNL) நிறுவனம் மலிவு விலை மற்றும் நீண்ட கால செல்லுபடியாகும் வேலிடிட்டி ஆகியவற்றை சரியான விகிதத்தில் இணைக்கும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ரூ. 300 விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொலைத்தொடர்பு துறையில் அதிக மதிப்புக் கொண்ட மலிவு விலை திட்டமாக வெளிவந்துள்ளது. இந்த திட்டம் 52 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது நீண்ட நேரம் நீடிக்கும் ரீசார்ஜ் விருப்பங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்கிறது. அடிக்கடி டாப்-அப்கள் செய்வதில் இருந்து பயனர்களை விடுவிக்கிறது.

இந்த திட்டம் நீண்ட கால செல்லுபடியாகும் காலத்தின் வசதியை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை போன்ற விரிவான நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டம் அதிகமாக வாய்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை நம்பியிருக்கும் வடிக்கையாளர்களுக்குரியது. பெரியளவு டேட்டாவை எதிர்பார்காதவர்களுக்கும் இந்த திட்டம் சிறந்தது.

பட்டைய கிளப்புது BSNL.. ரூ.300 விலைக்குள் 52 நாள் வேலிடிட்டி திட்டம்..

பட்டைய கிளப்புது BSNL.. ரூ.300 விலைக்குள் 52 நாள் வேலிடிட்டி திட்டம்:

பி.எஸ்.என்.எலின் புதிய சலுகையை பரந்த அளவிலான பயனர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான தொகுப்பாக நிலைநிறுத்துகிறது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது, பிஎஸ்என்எல் ரூ. 298 திட்டம் (BSNL Rs 268 Plan) என்ற பெயருடன் வருகிறது. இது மொத்தம் 52 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது செல்லுபடியாகும் காலம் முழுவதும் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வழக்கமான இன்டர்நெட் ப்ரொவ்சிங் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டிற்கு போதுமானது என்று கருதப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 298 திட்டம் (BSNL Rs 268 Plan):

தினசரி டேட்டா வரம்பு எட்டியவுடன் டேட்டாவின் வேகம் குறைக்கப்பட்டும். இந்த திட்டத்தின் பயனர்கள் இணைப்பில் இருக்க இலவச எஸ்எம்எஸ் சேவையை அதிகபட்சமாக பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல் ரூ. 298 திட்டம் மிதமான டேட்டா தேவைகளைக் கொண்ட பயனர்களை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பி.எஸ்.என்.எல். அதிக டேட்டா தீவிரமான பயனர்களின் தேவைகளை புறக்கணிக்கவில்லை.

பிஎஸ்என்எல் ரூ. 249 திட்டம் (BSNL Rs 249 Plan):

அத்தகைய பயனர்களுக்காக நிறுவனம் ரூ. 249 திட்டம் (BSNL Rs 249 Plan) ஒரு மாற்று வழியாகும். இது 45 நாட்களுக்குள் தினசரி 2 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது பட்ஜெட் பிரியர்கள் மத்தியில் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இத்தகைய போட்டி விலையில் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான பி.எஸ்.என்.எல். உத்தி பாராட்டிற்குரியது.

இந்த இரண்டு திட்டங்களும் இப்போது பிஎஸ்என்எல் இன் பல வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. தினசரி 1GB டேட்டா கிடைத்தால் போதும், ஆனால், வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையில் சமரசம் செய்ய முடியாதென்று கருதுபவர்கள் பிஎஸ்என்எல் இன் இந்த புதிய BSNL ரூ. 298 திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த திட்டம் 52 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

மறுபுறம், தினசரி டேட்டாவும் 2GB நன்மைக்கு கீழ் குறையக்கூடாது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டம் 45 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுவொரு அற்புதமான திட்டமாக மலிவு விலையில் அமைந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 298 and Rs 249 Plan Is The Best Recharge Plan Under Rs 300 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X