Home
News

BSNL சிம் வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. 365 நாட்கள் முழுவதுக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் வழியாக அடுத்த தீபாவளி வரைக்கும் வேலிடிட்டி கொடுக்கும்படியான திட்டம் இப்போது கிடைக்கிறது. 3 ஜிபி தினசரி டேட்டாவுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் கிடைப்பதால், இப்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வருடாந்திர வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைத்தாலே அதன் விலை ரூ.3,000 மேல் இருக்கும். ஜியோ மற்றும் ஏர்டெல்லில் இதுபோன்ற திட்டங்களின் விலை ரூ.3,599ஆக இருக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனமானது, அதை வெறும் ரூ.2,799 விலைக்கே கொடுத்து வருகிறது.

BSNL சிம் வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. 365 நாட்கள் முழுக்க!

பிஎஸ்என்எல் ரூ.2799 திட்ட விவரங்கள் (BSNL Rs 2799 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. 365 நாட்களில் மொத்தமாக 1,095 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். 3 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா வருகிறது.

வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த பிஎஸ்என்எல் ரூ.2799 திட்டம் கொடுக்கிறது. ஆகவே, இந்த ஒரேவொரு ரீசார்ஜ் செய்தால் போதும், அடுத்த தீபாவளி வரையில் வேலிடிட்டி கிடைக்கும்.

இதைவிட கம்மியான விலைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் வருடாந்திர திட்டங்கள் இருக்கின்றன. டேட்டாவுக்கு ஏற்ப கிடைக்கின்றன. அதேபோல ஒரு வருடாந்திர திட்டத்தில் மட்டும் இன்சூரன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் மற்ற 2 திட்டங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2449 திட்ட விவரங்கள் (BSNL Rs 2449 Plan Details): முந்தைய வருடாந்திர திட்டத்தில் கிடைத்ததை போலவே இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும்.

மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைத்துள்ளன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கொடுக்கிறது. முந்தைய திட்டத்தைவிட டேட்டா கம்மியாக இருந்தாலும், இன்சூரன்ஸ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): மேலே பார்த்த திட்டத்தில் இன்சூரன்ஸ் சலுகை கூடுதலாக இருக்கிறது. இந்த சலுகையை மட்டும் வேண்டாம் என்றால், பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும். ஏனென்றால், இன்சூரன்ஸ் சலுகையை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை பெறலாம். 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Rs 2799 Plan With 3GB Data 365 Days Validity Unlimited Calls One Recharge 1 Year Connectivity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X