ஒரே ரீசார்ஜில் 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினமும் 3GB டேட்டா.. எஸ்எம்எஸ்.. எந்த திட்டம்?
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (Bsnl) நிறுவனம். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்களை விடக் குறைந்த விலையில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது பிஎஸ்என்எல் ரூ.2799 விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. இங்கே இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் ரூ.3599 மற்றும் ரூ.3999 விலையில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் சற்று குறைந்த விலையில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபேய்ட் திட்டத்தை தருகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருட வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஒருவேளை 330 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 Prepaid Plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 495ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக இந்த திட்டமும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications