Home
News

BSNL போட்ட போடு.. வெறும் ரூ.277 போதும்.. 60 நாட்கள் வேலிடிட்டி.. 120GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கும் அடிமட்ட விலை கொண்ட திட்டங்களானது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. இப்போது, வெறும் ரூ.277 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், 120 ஜிபி டேட்டாவை கொடுத்து, கஸ்டமர்களை அறக்க பறக்க செய்துள்ளது. இப்படி நான்கு திட்டங்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி கிடைக்கின்றன. 60 நாட்கள் வேலிடிட்டி முதல் 365 நாட்கள் வேலிடிட்டி வரையில் இந்த திட்டங்கள் சலுகைகளை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம், வாய்ஸ் கால்கள், டேட்டா என்று தனித் தனியாக திட்டங்களை கொடுக்கிறது. இதில் டேட்டா திட்டங்கள் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவன கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி சலுகைகளை கொடுக்கின்றன. முதலில் ரூ.277 விலைக்கு கிடைக்கும் லம்ப்-சம் டேட்டா திட்டத்தை தெரிந்து கொள்வோம்.

BSNL போட்ட போடு! ரூ.277 போதும்.. 60 நாட்கள் வேலிடிட்டி.. 120GB டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ 277 திட்ட விவரங்கள் (BSNL Rs 277 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 120 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இது லம்ப்-சம் டேட்டா சலுகையாக இருப்பதால், நாளொன்றுக்கு லிமிட் கிடையாது. தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த டேட்டா திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டிக்கு முன்பாகவே 120 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்திவிட்டால், அவர்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதேபோல 60 நாட்கள் வேலிடிட்டியில் தினசரி டேட்டா தேவைப்பட்டால், ரூ.288 மதிப்பிலான திட்டத்தை பெறலாம்.

பிஎஸ்என்எல் ரூ 288 திட்ட விவரங்கள் (BSNL Rs 288 Plan Details): இதுவும் டேட்டா மட்டுமே கொண்ட திட்டமாகும். ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. ஆனால், முந்தைய திட்டத்தை போலல்லாமல், தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கும் எப்யூபி டேட்டா (FUP Data) சலுகை இருக்கிறது. அதாவது, 2 ஜிபிக்கு பிறகும் டேட்டா கிடைக்கும்.

ஆனால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டா திட்டத்துக்கும் 60 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இதேபோல டேட்டா சலுகை 180 நாட்களுக்கு அதாவது 6 மாதங்களுக்கு வேண்டுமானால், ரூ.788 விலைக்கு கிடைக்கும் டேட்டா திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்ல வேண்டி இருக்கிறது. இதன் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 788 திட்ட விவரங்கள் (BSNL Rs 788 Plan Details): இந்த பிஎஸ்என்எல் டேட்டா திட்டத்துக்கு 180 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு டேட்டாவை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் கிடைக்கும். ஆகவே, 360 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்துக்கும் எப்யூபி டேட்டா வருகிறது.

ஆகவே, 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை எதிர்பார்க்கலாம். இப்போது, அதிகப்படியான விலைக்கு கிடைக்கும் பிஎஸ்என்எல் டேட்டா திட்டத்தை (BSNL Data Plan) பற்றி தெரிந்து கொள்வோம். இந்த திட்டம் வருடாந்திர வேலிடிட்டியில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும், டேட்டாவை தவிர வேறு சலுகைகளை இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.

இந்த டேட்டா திட்டத்தின் விலை ரூ.1515 ஆக இருக்கிறது. வருடம் முழுவதும், அதாவது 365 நாட்களுக்கான வேலிடிட்டியை கொடுக்கிறது. இந்த 365 நாட்களிலும் ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். அதேபோல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் பெறலாம். இந்த திட்டங்களுக்கு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 277 Plan With 60 Days Validity 120GB Data 40Kbps FUP Data Check 2 Months Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X