கொஞ்சம் கேப் விடுங்க BSNL.. 120ஜிபி டேட்டா.. மலிவு விலையில் புதிய திட்டம் அறிமுகம்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் லைவ் டிவி சேனல், 4ஜி சேவை, 5ஜி சோதனை மற்றும் புதிய திட்டங்கள் என அறிவித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பண்டிகை கால சலுகையை வழங்கி உள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தற்போது ரூ.277 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல். இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் வேலிடிட்டி எத்தனை நாள் என்பதை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.277 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 277 Plan) ஆனது ஒரு டேட்டா திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 120ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதாவது தினமும் 2ஜிபி டேட்டா. பின்பு இந்த ஆஃபர் ஜனவரி 16 வரை மட்டுமே இருக்கும் அதன் பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது என பிஎஸ்என்எல் நிறுவனம் X (ட்விட்டர்) தளத்தில் தகவலைப் பகிர்ந்துள்ளது. குறிப்பாக டேட்டா மட்டுமே தேவைப்படும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இப்போது பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 628 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம் . எனவே நீங்கள் ரூ.628 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), ஜிங்க்(Zing) பிஎஸ்என்எல் டியூன், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.628 ப்ரீபெய்ட் திட்டம். அதிக வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களை இந்த திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவை அறிமுகம் செய்யும். பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் இன்னும் அதிக பயனர்கள் இந்நிறுவனத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








