ரொம்ப ரொம்ப விலை கம்மி.. BSNL ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் பிளான்.. 4ஜி, 100GB டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்!
சீனியர் சிட்டிசன்களுக்கான அறிவிக்கப்பட்ட பிஎஸ்என்எல் சம்மன் பிளான் ஆபர் ஆனது நாளை (நவம்பர் 18 ஆம் தேதி) உடன் முடிவடைய உள்ள நிலையில், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது மாணவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் பிளானை அறிமுகம் செய்துள்ளது.
என்ன விலை? பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் பிளானின் விலை ரூ.251 ஆகும். 2025 குழந்தைகள் தினத்தன்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், பிஎஸ்என்எல்-ன் மற்ற ஸ்பெஷல் திட்டங்களை போலவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அப்படியாக பிஎஸ்என்எல் ரூ.251 ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் பிளான் ஆனது 2025 டிசம்பர் 13 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.251 ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் பிளானின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கின் கீழ் 100ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ.250 க்கு பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க்கின் கீழ் 100ஜிபி டேட்டா கிடைப்பது உண்மையிலேயே அற்புதமான ஆபர் ஆகும். இது குறித்த அறிவிப்பில் " இந்த பெரிய டேட்டா லோலட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு 100ஜிபி வரையிலான டேட்டா பயன்பாட்டை வழங்கி - உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி மொபைல் நெட்வொர்க்கை அனுபவிக்க மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது" என்று பிஎஸ்என்எல்-ன் சிஎம்டி ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.
மேலும் "புதிய பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா சேவைகளை அவர்கள் (மாணவர்கள்) அனுபவித்த உடன், பிஎஸ்என்எல்-ன் சிறந்த சேவை தரம் மற்றும் கவரேஜை உறுதி செய்வதன் வழியாக, அவர்கள் எங்களுடன் நீண்ட காலம் தொடர்வார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.
பிஎஸ்என்எல் ரூ.251 ஸ்டூடெண்ட் பிளான் வொர்த்-ஆ இல்லையா? இந்த திட்டம் மதிப்புள்ளதா இல்லையா என்பது நீங்கள் இருக்கும் டெலிகாம் சரக்கிளை பொறுத்தது. ஏனென்றால் இது 4ஜி டேட்டாவுடன் வருகிறது. உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, நீங்களே தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். மேலும் இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை, எனவே விரைவில் ரீசார்ஜ் செய்து முயற்சித்து பார்ப்பது நல்லது.
2025 நவம்பர் 18 உடன் முடியும் பிஎஸ்என்எல் சம்மன் பிளான் (BSNL Samman Plan) ஆபர்: இது மூத்த குடிமக்கள் என வகைப்படுத்தப்பட்ட 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய பயனர்களுக்கு 365 நாள் செல்லுபடியாகும் காலத்துடன் வரும் பிஎஸ்என்எல் ஸ்பெஷல் பிளான் ஆகும்.
இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் ஆறு மாத பிஐடிவி (BiTV) சந்தாவும் கிடைக்கும். இது ஒரு வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி இது 2025 நவம்பர் 18 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன் திட்டம் என்றும் அழைக்கப்படும் இந்த புதிய பிஎஸ்என்எல் சம்மன் திட்டத்தின் விலை ரூ.1,812 ஆகும். அதாவது மாதாந்திரம் ரூ.151 என்கிற செலவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மாதந்தோறும் அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய விரும்பாத சீனியர் சிட்டிசன்கள், இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் சேவையின் கீழ் புதிய கஸ்டமராக இணைவதன் மூலம் மலிவான விலைக்கு 1 ஆண்டு முழுவதுமான நன்மைகளை பெறலாம்.


Click it and Unblock the Notifications








