Home
News

BSNL கிஃபிட்: 3GB இலவச போனஸ் டேட்டா.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்தியாவில் பல புதிய திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்களுக்கு BSNL தான் ஹீரோவாக திகழ்கிறது.

என்ன தான் நகரங்களில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), போன்ற நிறுவனங்கள் சிறந்து விளங்கினாலும், இந்தியாவின் மூலைமுடுக்கு வரை பறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தொலைத்தொடர்புடன் இணைக்க BSNL பெரிதும் வேலை செய்து வருகிறது. விரைவில் இந்தியா முழுக்க உள்ள 1 லட்சம் நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

BSNL கிஃபிட்: 3GB இலவச போனஸ் டேட்டா.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பிஎஸ்என்எல் வழங்கும் இலவச 3ஜிபி போனஸ் டேட்டா (BSNL Free 3GB Bonus Data):

இந்த நிலையில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு திடீரென ஒரு சர்ப்ரைஸை (Surprise) வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இப்போது நிறுவனம் இலவசமாக 3ஜிபி டேட்டாவை போனஸ் டேட்டா (3GB bonus data) நன்மையாக வழங்குகிறது. இது இலவச 3ஜிபி போனஸ் டேட்டாவை (BSNL Free 3GB Bonus Data) பெற BSNL வாடிக்கையாளர்கள் சில எளிய நீபந்தனைகளை சரியாக செய்திருக்க வேண்டும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சரி, இப்போது எப்படி இந்த இலவச 3ஜிபி டேட்டாவை நாம் பெறுவது? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, நிறுவனம் வழங்கும் சில குறிப்பிட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (BSNL Prepaid Recharge Plans) திட்டங்களை தேர்வு செய்யும் மக்களுக்கு இந்த இலவச போனஸ் டேட்டா நன்மை கிடைக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.

நமக்கு தெரிந்த வரை, பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 251, ரூ. 299, ரூ. 398, ரூ. 666, ரூ. 499 மற்றும் ரூ. 599 ஆகிய 6 திட்டங்களுடன் இந்த இலவச 3GB போனஸ் டேட்டா (BSNL 3GB Bonus Data) கிடைக்கிறது. இதில் ஒரு திட்டம் மட்டும் டேட்டா வவுச்சர் திட்டமாக (BSNL Data Voucher) இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

BSNL கிஃபிட்: 3GB இலவச போனஸ் டேட்டா.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த திட்டங்களுடன் கிடைக்கும் நன்மையுடன் சேர்த்து, இப்போது இதன் பயனர்களுக்கு போனஸ் டேட்டா (BSNL Bonus Data) என்ற பெயரில் 3ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கிறது. இந்த போனஸ் டேட்டாவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், உங்கள் BSNL மொபைல் நம்பரை இந்த 6 திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ் (BSNL Recharge) செய்துகொள்ளலாம்.

பிஎஸ்என்எல் செல்ஃப்-கேர் ஆப்ஸ் (BSNL Self-Care app):

முக்கிய குறிப்பு, மேலே கூறப்பட்டுள்ள 6 திட்டங்களை வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செல்ஃப்-கேர் ஆப்ஸ் (BSNL Self-Care app) மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் (BSNL Online Recharge) செய்தல் இந்த நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் பதிவிடப்பட்டுள்ள பிஎஸ்என்எல் ரூ. 251 திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் (BSNL Rs 251 Data Voucher) திட்டமாகும். இந்த திட்டம் அதன் பயனருக்கு 70ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் ஜின்க் (Zing) சேவைக்கான சந்தாவும் கிடைக்கிறது. இது பிஎஸ்என்எல் மொபைல் ஆப்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்தை தேர்வு செய்தலும் உங்களுக்கு பிஎஸ்என்எல் வழங்கும் 3ஜிபி போனஸ் டேட்டா இலவசமாக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 251 Rs 299 Rs 398 Rs 666 Rs 499 Rs 599 Prapaid Plan Users Gets 3GB Bonus Data Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X