Home
News

BSNL ஒரே போடு.. வெறும் ரூ.251-க்கு 60 நாட்கள் வேலிடிட்டி.. 251 ஜிபி டேட்டா.. இதைவிட என்னங்க வேண்டும்?

மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் வாய்ஸ் கால்கள் சலுகைகளை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) மட்டுமல்ல டேட்டா சலுகைகளை கொண்ட திட்டங்களும் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, 60 நாட்கள் வேலிடிட்டியில் 251 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் களமிறக்கப்பட்டுள்ளது. இதேபோல 90 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியில் திட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று டேட்டா திட்டங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இப்போது நாம் பார்க்க இருக்கும் மூன்று திட்டங்களிலும் டேட்டா சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடம் பேஸ் ஆக்டிவ் திட்டம் (Base Active Plan) இருக்க வேண்டும். அதாவது, வாய்ஸ் கால்களுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஏற்கனவே வைத்திருந்து, இந்த திட்டங்களை கூடுதல் டேட்டாவுக்காக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

BSNL ஒரே போடு.. வெறும் ரூ.251-க்கு 60 நாட்கள்.. 251 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ 251 திட்ட விவரங்கள் (BSNL Rs 251 Plan Details): இந்த பிஎஸ்என்எல் டேட்டா திட்டத்தில் (BSNL Data Plan) 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு மொத்தமாக 251 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இது லம்ப்-சம் டேட்டா (Lumpsum Data) சலுகையாக இருப்பதால், 60 நாட்களுக்குள் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்த 60 நாட்களுக்கு முன்பாகவே 251 ஜிபி டேட்டா முடிந்துவிட்டாலும், ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) வருகிறது. ஆகவே, 1 ஜிபி டேட்டா 1 ரூபாய்க்கு கிடைக்கிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் நல்ல லாபமாக இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தை போல லம்ப்-சம் டேட்டா வேண்டாம், தினசரிக்கு கிடைக்கும் டேட்டா திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் மற்றொரு டேட்டா திட்டம் இருக்கிறது. இது கூடுதல் விலை மற்றும் அதற்கு ஏற்ப அதிக வேலிடிட்டியுடன் கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 411 திட்ட விவரங்கள் (BSNL Rs 411 Plan Details): இந்த பிஎஸ்என்எல் டேட்டா திட்டத்துக்கும் பேஸ் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். முந்தைய திட்டத்தைவிட கூடுதல் விலைக்கு கிடைப்பதால் இதற்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது.

ஆகவே, 90 நாட்கள் வீதம் 180 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட குறைவாக இருந்தாலும், தினசரி லிமிட் மற்றும் 30 நாட்கள் அதிமாக வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த பிஎஸ்என்எல் டேட்டா திட்டத்துக்கும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை பொருந்துகிறது. இப்போது, அதிக வேலிடிட்டி மற்றும் டேட்டா சலுகை கொண்ட திட்டத்தை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): பிஎஸ்என்எல் டேட்டா திட்டங்களில் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது. இவ்வளவு விலைக்கு கிடைத்தாலும், இதற்கும் பேஸ் ஆக்டிவ் திட்டம் தேவைப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த வருடாந்திர டேட்டா திட்டத்துக்கும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் அதிக டேட்டா வேண்டுமானால், இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப 60 நாட்கள் வேலிடிட்டி, 90 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி என்று தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 251 Plan With 251GB Data 40Kbps FUP Data Check Cheapest Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X