BSNL அதிரடி.. 1 ரூபாய்க்கு 1GB டேட்டா.. IPL பாக்க பெஸ்ட் பிளான் இதான்.. 60 நாள் வேலிடிட்டி.. விட்றாதீங்க..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது ஐபிஎல் (IPL) ரசிகர்களை கவரும் விதமாக புதிய BSNL திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. BSNL நிறுவனம் இப்போது வெறும் 1 ரூபாய்க்கு 1GB டேட்டா நன்மை கிடைக்கும்படியான ஒரு புதுமையான திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை மற்றும் இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம். IPL கிரிக்கெட் போட்டிகளை குறைந்த செலவில் கண்டு மகிழ ஆசைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் விபரத்தை தெரிந்துகொள்வது சிறப்பானது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இப்போது பிஎஸ்என்எல் ரூ. 251 திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை கருத்தில் கொண்டு, IPL போட்டி சீசன் 18 நிகழ்வுகளை கிரிக்கெட் ரசிகர்கள் எந்தவித தடையுமின்றி கண்டு மகிழவும், குறைந்த செலவில் அதிக டேட்டா நன்மையை வாரி வழங்கவும் BSNL முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக BSNL நிறுவனம் புதிய 251 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

கோடிக் கணக்கான IPL ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக BSNL வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் 251 ரூபாயில் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 251 ரூபாயில் அதன் வாடிக்கையாளர்களுக்கு 251GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை நீங்கள் வெறும் 1 ரூபாய் விலையில் அனுபவிக்கலாம். 1 ரூபாய் என்ற விதத்தில் இந்த திட்டம் மொத்தமாக 251 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.
சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவின் மூலம் BSNL இந்த அற்புதமான புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. தங்கள் அறிவிப்பில், BSNL பயனர்களை ரூ.251 விலைக்கு 251GB அதிவேக டேட்டாவைப் பெற்று 60 நாட்களுக்கு இடைவிடாத கிரிக்கெட் ஆட்டத்தை அனுபவிக்கவும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி உடன் 1GB டேட்டாவை 1 ரூபாய் விலையில் வழங்குகிறது.
நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், இதுவொரு டேட்டா ஒன்லி திட்டம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை என்று வேறு எந்த நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது டேட்டா நன்மையை மட்டும் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.
ஒருவேளை உங்களுக்கு வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையுடன் டேட்டா நன்மையுடன் ஒரு திட்டத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், BSNL வழங்கும் மற்ற திட்டத்தை கருத்தில் அமைக்கலாம். அல்லது IPL போட்டிகளை காண உங்களுக்கு டேட்டா நன்மை மட்டும் தேவைப்பட்டால், நீங்கள் தாராளமாக இந்த BSNL Rs 251 Plan திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த பிஎஸ்என்எல் ரூ. 251 திட்டம் இப்போது BSNL இணையதள (BSNL website) பக்கம் மற்றும் BSNL செல்ப் கேர் ஆப்ஸ் (BSNL selfcare apps) மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் உங்களுக்கு இப்போது 1 ரூபாய் விலையில் 1GB டேட்டா நன்மையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








