Home
News

கேபிள் டிவிக்கு கும்பிடு.. ரூ.1494 போதும்.. 6 மாதங்கள் வேலிடிட்டி.. 500+ டிவி சேனல்கள்.. 25 எம்பிபிஎஸ் டேட்டா!

கேபிள் டிவிக்கு நிகராக இன்டர்நெட் வசதி இல்லாமலேயே 500+ டிவி சேனல்களை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. மாதத்துக்கு ரூ.249 விலையிலும், 6 மாதத்துக்கு ரூ.1494 விலையிலும் இந்த திட்டம் கிடைக்கிறது. 25 எம்பிபிஎஸ் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.249 திட்ட விவரங்கள் (BSNL FTTH Rs 249 Plan Details): இந்த திட்டத்தில் 25 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படும். அன்லிமிடெ் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கிறது.

கேபிள் டிவிக்கு கும்பிடு.. ரூ.1494 போதும்.. 6 மாதங்கள் வேலிடிட்டி!

மேலும், 500+ லைவ் டிவி சேனல்களையும் பார்த்து கொள்ளலாம். மாத செலவு ரூ.249ஆக மட்டுமே இருக்கிறது. இதே திட்டத்தை 6 மாதங்களுக்கும் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.1,494 விலைக்கு 6 மாதங்களுக்கு டேட்டா வாய்ஸ் கால்கள் மற்றும் 500+ லைவ் டிவி சேனல்களை பயன்படுத்தி கொள்ளலாம். வருடத்துக்கு ரூ.2,988 தேவைப்படுகிறது.

பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.299 திட்ட விவரங்கள் (BSNL FTTH Rs 299 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 25 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும். 20 ஜிபி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 20 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

500+ லைவ் டிவி சேனல்களும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கும் பெறலாம். இந்த 6 மாத வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.1794ஆக இருக்கிறது. வருடத்துக்கு பெற வேண்டுமானால், ரூ.3,588 செலுத்து பெற்று கொள்ளலாம். ஆகவே, வருடம் முழுவதும் இலவமாக லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும்.

டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், டேட்டாவும் அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.399 திட்டத்தை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் கூடுதல் டேட்டா வேகம் மற்றும் மொத்த டேட்டா அதிகமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் இருந்தே 1000 ஜிபிக்கு மேல் டேட்டா கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் எப்டிடிஎச் ரூ.399 திட்ட விவரங்கள் (BSNL FTTH Rs 399 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். இது முந்தைய திட்டங்களைவிட கூடுதலாக இருக்கிறது. அதே நேரத்தில் 1400 ஜிபி டேட்டா வரையில் இதே வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த 1400 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 4 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். இதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 500+ டிவி சேனல்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு பெற முடியாது. 12 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.4,788 விலை கொடுத்து வருடம் முழுவதும் டேட்டா, வாய்ஸ், டிவி சேனல்களை பெறலாம்.

இதில் டிவி சேனல்கள் ஐஎப்டிவி முறையில் கிடைக்கிறது. ஆகவே, இதற்கும் பிராட்பேண்ட் டேட்டாவுக்கும் தொடர்பு கிடையாது. கேபிள் டிவி போலவே கனெக்சன் மட்டுமே இருந்தால் போதும், லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். எச்டி சேனல்கள் வேண்டுமானால், கூடுதலாக வவுச்சர்களையும் இந்த எப்டிடிஎச் திட்டங்களில் பெறலாம். இதில் கூடுதலாக கஸ்டமர்களின் விருப்பதுக்கு ஏற்ப எச்டி சேனல்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 249 Rural FTTH Voice Unlimited Plan 500 TV Channels 25 Mbps Speed Data Unlimited Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X