BSNL சிம் இருக்கா? தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 3 மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது லைவ் டிவி சேனல் திட்டம், 4ஜி சேவை, 5ஜி சோதனை மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் இன்னும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி விட்டது. கூடிய விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி விலையில் அதிக நன்மைகளை தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL RS 347 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் உள்ளது.
குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ்வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டமேலும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








