Home
News

BSNL விஸ்வரூபம்.. இனி ஸ்பீடு டேட்டா-தான்.. 25 எம்பிபிஎஸ் அதிகரிப்பு.. 3 திட்டங்கள்.. புதிய கஸ்டமர்கள் குஷி!

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அடிமட்ட விலைக்கு கஸ்டமர்களை தட்டித்தூக்கி வருகிறது. இருப்பினும், டேட்டா வேகம் மற்ற நிறுவனங்களுக்கு நிகராக இல்லை என்பதை மறுக்க முடியாது. ஆனால், இப்போது அதிலும் சக்கைபோடு போடும்படி வேகத்தை கூட்டி இருக்கிறது. இதனால், புதிய கஸ்டமர்கள் குஷியாகிவிட்டனர். இந்த டேட்டா வேகம் அனைத்து கஸ்டமர்களுக்கும் பொருந்துமா? எந்த திட்டங்களில் டேட்டா வேகம் அதிகரிக்கபட்டுள்ளது? முழு விவரம் இதோ.

பிஎஸ்என்எல் ரூ 249, ரூ 299 மற்றும் ரூ 329 ஆகிய திட்டங்களில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் 2 திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. ஆகவே, அந்த திட்டங்களின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். அதேபோல ரூ 299 விலைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் ரூ 399 விலையில் கிடைக்கும் திட்டத்தையும் பார்க்கலாம்.

BSNL விஸ்வரூபம்.. இனி ஸ்பீடு டேட்டா-தான்.. 25 எம்பிபிஎஸ் அதிகரிப்பு!

பிஎஸ்என்எல் ரூ 249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களில் (BSNL Broadband Plans) அடிமட்ட விலைக்கு கிடைக்கும் திட்டம் இதுவாகும். முன்னதாக இந்த திட்டத்துக்கு 10 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்பட்டது. இப்போது 25 எம்பிபிஎஸ் வேகத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை (STD Voice Calls) செய்து கொள்ளலாம். 10 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் (2Mbps Speed) அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பயன்படுத்தலாம்.

பிஎஸ்என்எல் ரூ 299 திட்ட விவரங்கள் (BSNL Rs 299 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கும் 10 எம்பிபிஎஸ் வேகத்திலேயே டேட்டா சலுகை கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது 25 எம்பிபிஎஸ் வேகத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். 25 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும்.

அதன்பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த 2 திட்டங்களும் புதிதாக வரும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஏனென்றால், மிகவும் மலிவான விலைக்கு இந்த திட்டங்கள் இருக்கின்றன. அதேபோல டேட்டா வேகம் கூடுதலாக இருந்தாலும், 10 ஜிபி மற்றும் 20 ஜிபி மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது. ஆனால், லேண்ட்லைன் வாய்ஸ் கால்களை வைத்து பார்க்கையில் மற்ற நிறுவனங்களைவிட இந்த திட்டங்கள் மட்டுமே அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, ஆரம்பத்தில் இந்த திட்டத்தை பெற்றுவிட்டு, பிறகு மாதாந்திரம் ரூ.399 முதல் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்களை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் அதிகப்படியான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 399 திட்ட விவரங்கள் (BSNL Rs 399 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்துக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா சலுகை கிடைக்கிறது. அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, விலையைவிட கூடுதலாக டேட்டா சலுகை கிடைக்கிறது. 1000 ஜிபிக்கு பிறகும் டேட்டா அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.

ஆனால், 4 எம்பிபிஎஸ் வேகத்துக்கு குறைத்து வழங்கப்படும். முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. இருப்பினும், லேண்ட்லைன் டிவைஸ்களை கஸ்டமர்களே வைத்திருக்க வேண்டும். இந்த மூன்று திட்டங்களும் மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு கிடைக்கின்றன.

அதேபோல ஓடிடி சலுகையும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களில் கிடைக்கிறது. ஆனால், ரூ.599 மதிப்பிலான திட்டத்தை பெற வேண்டி இருக்கும். அப்படி பெற்றால், 75 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும். 4000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 4 எம்பிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. அதேபோல டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 249 Plan With Unlimited Calls 25Mbps Speed 10GB Data Check Speed Upgrade Broadband Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X