முடியலடா சாமி.. வெறும் ரூ.250-க்கு 45 நாட்கள் வேலிடிட்டி.. BSNL-க்கு குஷி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2ஜிபி டேட்டா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ரீசார்ஜ் கட்டண உயர்வுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை நம்ப முடியாதபடி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களும் பிஎஸ்என்எல்லில் கிடைக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் அலசி ஆராய தொடங்கிவிட்டர். இவர்களை ரூ.249 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த அடிமட்ட விலை கொண்ட திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களைவிட பிஎஸ்என்எல் நிறுவனம், அடிமட்ட விலைக்கு திட்டங்களை வைத்திருக்கிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் நாடு முழுவதும் கிடைக்கவில்லை என்றாலும், 4ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கும் இதே அடிமட்ட விலையிலேயே திட்டங்கள் கிடைக்கின்றன.

இதனாலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதிகளவில் கஸ்டமர்கள் மாறுகின்றனர். இப்படி மாறும் கஸ்டமர்கள் முதலில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய திட்டமாக ரூ.249 மதிப்பிலான திட்டம் இருக்கிறது. இது பிரத்யேகமாக புதிய கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மிகவும் மலிவாக கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 249 திட்ட விவரங்கள் (BSNL Rs 249 Plan Details): இந்த ஃபர்ஸ்ட் ரீசார்ஜ் வவுச்சர் (First Recharge Voucher - FRC) திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதேபோல 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டாவை தினசரி லிமிட்டில் (Daily Limit) பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும். அதாவது ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுக்கு இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் எந்தவித குறையும் இருக்காது. எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு 100 வீதம் கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைகளும் 45 நாட்கள் வேலிடிட்டியுடன் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த ரூ.250 விலைக்கு 45 நாட்கள் வேலிடிட்டியானது மற்ற நிறுவனங்களில் கிடைக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதில் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டுமே அதிகமாக கிடைக்கும். டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த திட்டத்தில் 45 நாட்களிலும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டம் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு லாபம் கொடுக்கும் திட்டமாகும். ஒருவேளை இதைவிட கம்மியான விலைக்கு ஃபர்ஸ்ட் ரீசார்ஜ் வவுச்சர் திட்டம் வேண்டுமானால், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேலிடிட்டி முழுவதும் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ 108 திட்ட விவரங்கள் (BSNL Rs 108 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த 1 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். இது தினசரி டேட்டா சலுகையாகும். ஆகவே, ஒவ்வொரு நாளுக்கும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 28 நாட்கள் வேலிடிட்டிக்கு 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
முந்தைய எப்ஆர்சி திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. மேலும், நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சலுகைகளும் முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 வீதம் பயன்படுத்தி கொள்ள கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களும் பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








